தனியார் வீடுகள் வாடகை குறைவு

தனியார் வீடுகள் வாடகை குறைவு

1 mins read
f7a8caf0-09a4-437b-a342-e89eff42d2ac
-

தனியார் அடுக்குமாடி வீடுகளின் வாடகை கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலையில் 0.4% குறைந்தது. அதே நேரத்தில், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான வாடகை 0.5% கூடியது என்று எஸ்ஆர்எக்ஸ் சொத்துச் சந்தை நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் பார்க்கையில் கூட்டுரிமை வீடுகள், தனியார் அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றுக்கான வாடகை, கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜூலையில் 4.8% குறைந்தது. முக்கிய மாவட்டங்களில் உள்ள வீடுகளுக்கான வாடகை 1.6% இறங்கியது. நகரின் விளிம்புப் பகுதியிலும் மத்திய வட்டாரத்துக்கு வெளியிலும் உள்ள வீடுகளுக்கான வாடகை முறையே 7%, மற்றும் 6.3% குறைந்தது. வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அடுக்குமாடி வீடுகளின் எண்ணிக்கை ஜூலையில் 4,100 ஆக இருந்தது.

வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் வாடகையைப் பார்க்கையில், மூவறை, நாலறை வீடுகளுக்கான வாடகை முறையே 1.3% மற்றும் 0.8% கூடியது. ஐந்தறை எக்சிகியூட்டிவ் வீடுகளுக்கான வாடகை முறையே 0.8% மற்றும் 0.4% இறங்கியது. ஜூலையில் வாடகைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வீவக வீடுகள் 1,653. இது ஓராண்டுக்கு முந்தைய அளவைவிட 10.3% குறைவு.