ஆற்றல் மிகுந்த அதிகாரிகள் உள்துறை குழுவுக்கு தேவை

ஆற்றல் மிகுந்த அதிகாரிகள் உள்துறை குழுவுக்கு தேவை

1 mins read
b97bd726-d533-4a49-8c7d-b238d24295df
-

உள்துறைக் குழு உருமாற்றத் திட்டம் ஒன்றைத் தொடங்கியிருக் கிறது. அதன்படி அந்த அமைப்பு 2025ஆம் ஆண்டு வாக்கில் பரந்த கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கும். கணினி கட்டமைப்புடன் தகவல்களின் அடிப்படையில் அது அதிகம் செயல்படும் என்று உள் துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்திருக்கிறார். இந்தத் திட்டம் நிறைவேற சரியான தேர்ச்சிகள், சரியான மனப்போக்கு, சரியான நன்னெறி களுடன் கூடிய அதிகாரிகளை பணிகளில் நியமித்து அவர்களைத் தக்கவைத்துக்கொள்வது அவசி யம் என்றார் அவர். இதற்காக உள்துறைக் குழு எதிர்கால தலைவர்களைப் பேணி உருவாக்க வேண்டியது உயிர்நாடியானது என்று அவர் வலியுறுத்தினார். உள்துறைக் குழுவின் பொருள்பொதிந்த பணிகள் தொடரும் வகையில் தலைசிறந்த ஆற்றல்மிக்கவர்களை அந்தக் குழுவின் பணிகளில் அமர்த்த வேண்டும் என்றும் அவர் குறிப் பிட்டார்.

உள்துறைக் குழு அதிகாரிகள் அன்றாடம் பல சவால்களை எதிர்நோக்குகிறார்கள் என்பதே இதற்கான காரணம் என்றார் அவர். பயங்கரவாத மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. குற்றச் செயல் போக்குகள் பரிணமித்து வருகின்றன. இத்தகைய சவால் களை எல்லாம் உள்துறைக் குழு அன்றாடம் எதிர்நோக்குகிறது என்று அவர் தெரிவித்தார். போதைப்பொருள் புழக்கம், கணினி இணையக் குற்றச்செயல் கள், பெரும் போக்குவரத்து மைய மாகத் திகழ்வதால் சிங்கப்பூர் எதிர்நோக்கக்கூடிய சவால்கள் இவை எல்லாம் புதிய பரிமாணம் எடுக்கும் குற்றச்செயல்களில் அடங்கும் என்றார் அவர்.

சிங்கப்பூர் போலிஸ் படை கல்வி உபகாரச் சம்பளத்தைப் பெற்ற மூவர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்