2015ல் அறப்பணிக்கு கொடை $1.4 பில்லியன்

2015ல் அறப்பணிக்கு கொடை $1.4 பில்லியன்

1 mins read
00a92c2d-e7a1-4de4-b425-52778389f54c
-

அறப்பணிக்கு கிடைத்த வரித் தள்ளுபடி நன்கொடைகள் 2015ல் $1.4 பில்லியனாக அதிகரித்தது. இது 2014ஆம் ஆண்டுடன் ஒப்பி டுகையில் 24%க்கும் அதிகம். கடந்த 17 ஆண்டுகளில் சென்ற ஆண்டு தொகைதான் ஆக அதி கம். அறப்பணி ஆணையர் அலு வலகம் தனது ஆண்டறிக்கையில் நேற்று இந்த விவரங்களைக் குறிப் பிட்டது. சிங்கப்பூரின் பொன்விழா கொண்டாட்டத்தை ஒட்டி, சென்ற ஆண்டு வரவுசெலவுத் திட்ட உரையில் வரித் தள்ளுபடி அதி கரிப்பு பற்றி அறிவிக்கப்பட்டது. அறப்பணி அமைப்புகளுக்கு நன்கொடையாகத் தரப்படும் தொகைக்குக் கிடைக்கும் வரித் தள்ளுபடி 250%லிருந்து 300%க்கு உயர்த்தப்பட்டது.

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓர் அறப் பணி அமைப்பிற்கு நன்கொடை யாகக் கொடுக்கப்படும் ஒவ்வொரு $1க்கும் நன்கொடையாளருக்கு, அவருடைய வரி விதிப்பிற்கான வருவாயில் $3 கழித்துக்கொள்ளப் படும் என்று அறிவிக்கப்பட்டது. நன்கொடை சென்ற ஆண்டில் அதிகரித்ததற்கு இதுவே முக்கிய காரணம் என்று தெரிவதாக அறப்பணி ஆணையர் அலுவலகம் குறிப்பிட்டது. கடந்த 2015ல் கலாசார பரஸ்பர நிதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஆயுட்கால நிதி வரம்பு $10 மில்லி யனிலிருந்து $15 மில்லியனுக்கு உயர்த்தப்பட்டது. நன்கொடைகளில் கணிசமான அதிகரிப்பு இடம்பெற்றதற்கு இதுவும் காரணம் என அறப்பணி ஆணையர் லோ புக் இயோங் அந்த அறிக்கையில் குறிப்பிட் டிருக்கிறார்.

அறப் பணிக்கு நன்கொடை வழங்கும் மக்களுக்கு வரித் தள்ளுபடி உண்டு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்