பலர் கைது; $138,000 போதைப்பொருள் பிடிபட்டது

பலர் கைது; $138,000 போதைப்பொருள் பிடிபட்டது

1 mins read
cc7cc613-53d2-4fe5-bfda-01dd442c1290
-

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப் பொருள் கடத்துபவர் என்று சந் தேகிக்கப்படும் ஒருவரையும் அவ ருடைய சகாக்களையும் கைது செய்திருக்கிறார்கள். $138,000 மதிப்புள்ள போதைப்பொருளை அவர்கள் கைப்பற்றினர். தீவு முழுவதும் அதிகாரிகள் மேற்கொண்ட கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகளில் அந்த நபர்கள் சிக்கியதாக நேற்று அறிக்கை ஒன்றில் இந்தப் பிரிவு தெரிவித்தது. போதைப்பொருள் கடத்துபவர் என்று சந்தேகிக்கப் பட்ட 33 வயது ஆடவர் ஒரு சிங்கப்பூரர்.

அவர் பாலஸ்டியரில் பூன் டெக் ரோட்டில் 40 வயது மலேசியர் ஒருவரைச் சந்தித்தார். பிறகு இரு வரும் தனித்தனியாகப் பிரிந்து சென்றுவிட்டனர். சந்தேகப்பேர்வழி குவீன்ஸ்டவுன் நோக்கிப் போனார். அங்கு அவர் $600க்கும் அதிக தொகையுடன் கைதானார். அவரின் காரில் 1.4 கிராம் ஹெராயின், 320 கிராம் ஐஸ் போதைப்பொருள், எடைச் சாதனம் எல்லாம் சிக்கின.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருள், பணம். படம்: மத்திய போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு