அதிக சத்தமாக உள்ளது என்று பிள்ளைகள் மீது முட்டையை வீசியவருக்கு அடி, உதை

அதிக சத்தமாக உள்ளது என்று பிள்ளைகள் மீது முட்டையை வீசியவருக்கு அடி, உதை

1 mins read
359c28ce-4a9f-4777-8a99-bafe6a871e49
-

தியோங் பாரு, பியோ கிரசெண்டில் இருக்கும் புளோக் 42 தரைத்தளத் தில் உள்ள விளையாட்டுத் திட லில் ஞாயிற்றுக்கிழமை சிறார்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது நான்காவது மாடி வீட்டிலிருந்து ஆடவர் ஒருவர் அந்தப் பிள்ளைகளை நோக்கி முட்டை ஒன்றை வீசி எறிந்தார். பிள்ளைகள் போட்ட சத்தம் தாங்க முடியவில்லை என்று கூறி அந்த ஆடவர் வீசி எறிந்த முட்டை, அங்கு விளையாடிக்கொண்டிருந்த 1 வயது பெண் குழந்தையின் மீது வந்து விழவிருந்தது.

மயிரிழையில் அந்தக் குழந்தை தப்பிவிட்டது. முகம்மது ஃபாருக், 30, என்ற ஆடவர் முட்டை வீசியதை அறிந்து, ஐந்து ஆடவர்கள் ஃபாருக்கின் வீட்டிற்குச் சென்று அவரை விளையாட்டுத் திடலுக்கு வரவழைத்து தாக்கினர். தன் கணவர் தாக்கப்பட்டது குறித்து ஃபாருக்கின் மனைவி ஞாயிற்றுக்கிழமை இரவு 11.10 மணிக்கு போலிசில் புகார் செய்த தாக அறிக்கை ஒன்றில் போலிஸ் குறிப்பிட்டது. ஃபாருக்கை தாக்கிய ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்களுக்கு வயது 17 முதல் 41வரை. அவர்களில் நால்வர் பியோ கிரசெண்டில், சம்பவம் நிகழ்ந்ததற்குப் பிறகு இரண்டு மணி நேரத்திற்குள் கைதாயினர்.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஃபாருக். படம்: வான் பாவ்