மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆங்கிலோ சீனப் பள்ளி

மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆங்கிலோ சீனப் பள்ளி

2 mins read
848fafd7-b8a2-445a-b996-939039bd18a1
-

ஆங்கிலோ சீன பள்ளிக் குடும்பத் தின் மாணவர்கள் ஆசிரியர்கள் என சுமார் 500 பேர் நேற்றுக் காலை ஒன்றுகூடி, தங்கள் முன்னாள் மாணவரின் ஒலிம்பிக் சாதனையை நேரில் கண்டு ஆனந்தக் கூத்தாடினர். ஆங்கிலோ சீன தன்னாட்சிப் பள்ளி மண்டபத்தில் நேற்றுக் காலை அவர்கள் முன்னாள் மாணவர் ஜோசஃப் ஸ்கூலிங் ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஆண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் இறுதிப் போட்டியில் அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றதைப் பார்த்தனர்.

ஆங்கிலோ சீன தன்னாட்சிப் பள்ளியில் முதல் ஈராண்டுகள் படித்த ஸ்கூலிங், 2009ஆம் ஆண்டில் ஃபுளோரிடாவில் உள்ள போலெஸ் பள்ளியில் சேர்ந்தார். "இறுதிப் போட்டியில் பங்கேற் கும் ஸ்கூலிங்குக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் உற்சாகம் ஊட்ட வாய்ப்பளிக்கும் வகையில் நாங்கள் இந்தச் சிறப்பு நேரடிக் காட்சிக்கு ஏற்பாடு செய்தோம்," என்றார் ஆங்கிலோ சீன தன் னாட்சிப் பள்ளியின் பேச்சாளர் ஒருவர்.

"ஸ்கூலிங் போட்டியில் வெற்றி பெற்றதும் மட்டுமல்லாது புதிய ஒலிம்பிக் சாதனையையும் ஏற் படுத்தியுள்ளார். இந்த நிகழ்வு சிங்கப்பூர் வரலாற்றில் பல்லாண்டு காலம் நீடித்து நிலைத்திருக்கும். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் சிங்கப்பூரர் என்ற முறையில் ஸ்கூலிங் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டார். ஏசிஎஸ் குடும்பம் மற்றும் சிங்கப்பூரின் மகன் என்ற வகையில் ஸ்கூலிங் குக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்," என்றார் அந்தப் பள்ளியின் சுகாதார, உடலியல் கல்வி, பொழுதுபோக்குப் பிரி வின் இயக்குநர் திரு சான் சீ வெய்.

2009ல் நடந்த சிங்கப்பூர் பள்ளிகளுக்கு இடையிலான தேசிய வெற்றியாளர் போட்டிகளில் 4x50 மீ. பலபாணி அஞ்சல் நீச்சலில் வெற்றி பெற்ற ஆங்கிலோ சீனப் பள்ளி மாணவர் குழுவில் ஒருவராக இடம்பிடித்திருந்த ஸ்கூலிங் (வலமிருந்து இரண்டாவது).