முன்னோடித் தலைமுறை உதவித் திட்டம் பற்றி அந்த தலைமுறையின ரில் அதிகமானவர்கள் இப்போது நன்கு தெரிந்துகொண்டிருக்கிறார் கள். இதற்கு சிறப்புப் பணிக் குழு ஒன்று மிகவும் உதவியிருக்கிறது. முன்னோடித் தலைமுறையி னரை எட்டி அவர்களுக்கு உதவித் திட்டம் பற்றி விளக்குவதற்காக 'முன்னோடித் தலைமுறைத் தொடர்பு சிறப்புப் பணிக்குழு' ஒன்று அமைக்கப்பட்டது. அதற்கு டாக்டர் ஏமி கோர், திருவாட்டி ஜோசஃபின் டியோ இருவரும் தலைவர்கள். அந்தப் பணிக்குழுவின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிந்திருக்கிறது. இதைக் கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம் ஒரு விருந்து நடந்தது.
பணிக்குழுவில் 22 பேர் உறுப் பினர்கள். அவர்கள் 2014 ஏப்ரல் முதல் முன்னோடித் தலைமுறை யைச் சேர்ந்த முதியவர்களை எட்டி அவர்களுக்கு உரிய முன்னோடித் தலைமுறை உதவித் திட்டத்தின் மருத்துவ நன்மைகள் பற்றி எடுத் துக் கூறி விளக்கினார்கள். கொள்கைகளை உருவாக்கும் அதிகாரிகள், தனியார் துறை அதிகாரிகள், சுகாதார நிலையங் கள், தொண்டூழிய நல்வாழ்வு அமைப்புகள் ஆகியவற்றின் பேரா ளர்களும் அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர். அச்சு விளம்பரங்கள் ஒருபுறம் இருக்க, ஒளிபரப்பு ஊடகத்தையும் அந்தச் சிறப்புப் பணிக்குழு பயன் படுத்திக்கொண்டது.
முன்னோடித் தலைமுறைத் தொண்டூழியர்களைப் பாராட்டும் வகையில் அங் மோ கியோ, செங்காங் வெஸ்ட் வட்டாரங்களில் சென்ற மாதம் 9ஆம் தேதி ஒரு விருந்து நடந்தது. வீடுகளுக்குச் சென்று முதியோருக்குத் தாங்கள் விளக்கம் அளிப்பது பற்றி முன்னோடித் தலைமுறை அலுவலக ஊழியர்கள் அந்த விருந்து நிகழ்ச்சியில் நடித்துக் காட்டினார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

