சுதாஸகி ராமன்
முன்பு பச்சை பசேல் என்று காணப்பட்ட சிங்கப்பூர், இன்று கட்டடங்கள் நிரம்பி வழியும் அள விற்கு மாறியுள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகையால் கட்டடங்களுக்கு வழிவிடும் விதத்தில் மரம், செடி கொடிகள் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. கட்டடங்கள் நிறைந்த நம் நாட்டில் மீண்டும் பசுமையை அறிமுகப்படுத்தி சிங்கப்பூரை ஒரு பூங்கா நகரமாக மாற்றி அமைக்கும் நோக்கில் பசுமை இயக்கத்தைக் கடந்த 1963ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார் சிங்கப்பூரின் முதல் பிரதமர் அமரர் திரு லீ குவான் இயூ.
பல்லாண்டுகளுக்கு முன் நட்டு வைக்கப்பட்ட மரங்களைப் பேணிக் காத்தல், புதிய மரங்களை நடுதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் சிங்கப்பூரைப் பசுமைப்படுத் தும் அந்த இயக்கத்திற்குப் புதிய முயற்சிகளை எடுத்துவருகிறது தேசிய பூங்காக் கழகம். அவ்வகையில் தாவரவியலைக் கட்டடங்களோடு சங்கமித்து உணர்வற்ற கட்டடங்களுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் தேசிய பூங்காக் கழகத்தின் சமூகத் தோட்டக்கலைப் பிரிவின் துணை இயக்குநர் திரு வாட்டி மா. பூங்கோதை, 50.
நன்யாங் பலதுறைத் தொழிற் கல்லூரி, கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனை, 'ஓஷியன்' நிதி மையம் போன்ற கட்டடங்களில் மாடித் தோட்டங்கள், செங்குத்தான தோட்டங்கள் என்று 72 ஹெக்டர் நிலத்திற்கான தோட்டங்களை அவரது குழு இதுவரை அமைத் துள்ளது. "சிங்கப்பூரின் நிலப் பற்றாக் குறையை மனதில் கொண்டு உரு வாக்கப்பட்ட இந்த வானுயர் தோட் டங்கள், சிங்கப்பூரின் தனிச்சிறப்பு. இம்முயற்சி சுற்றுப்புறத்தைப் பசு மையாக வைத்துக்கொள்ள கட்டட உரிமையாளர்களை ஊக்குவிக் கிறது," என்று அவர் கூறினார்.
தோட்டக்கலையில் அனை வரும் ஈடுபடலாம் என்று நம்பும் இவர், தம் குழுவினரோடு வானு யர் தோட்டங்களை அமைக்கும் போது கட்டடங்களைப் பயன்படுத் தும் மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோரின் உத வியை நாடுகிறார்.
ஒன்று சேர்ந்து செடிகளை நட்டு அவற்றைப் பேணிக் காப்பதன் மூலம் பள்ளி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் என்று தோட்டம் அமைப்பதில் ஈடுபடுபவர்களிடையே உள்ள பிணைப்பு அதிகரிக்கும் என்கிறார் தேசிய பூங்காக் கழகத்தின் சமூகத் தோட்டக்கலைப் பிரிவின் துணை இயக்குநர் திருவாட்டி மா. பூங்கோதை. படம்: திமத்தி டேவிட்

