நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்: குறைகூறியதற்கு மன்னிப்புக் கோரிய லீ வெய் லிங்

நீதிமன்ற அவமதிப்புச் சட்டம்: குறைகூறியதற்கு மன்னிப்புக் கோரிய லீ வெய் லிங்

1 mins read

நீதிமன்ற அவமதிப்பு நகல் சட்டத்தைக் குறைகூறிய இரண்டு மணி நேரத்திற்குப் பின் அதற்காக மன்னிப்புக் கோரிய டாக்டர் லீ வெய் லிங் இதில் தமது அனுமானங்கள் தவறு என்பதை உணர்ந்ததாகக் கூறியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பை குற்றச்செயலாக அறிவிக்கும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை நேற்று மதியம் தமது ஃபேஸ்புக் பதிவில் பிரதமரின் சகோதரியான டாக்டர் லீ வெய் லிங் குறைகூறியிருந்தார். இந்தச் சட்டத்தின்படி, நீதி மன்ற ஆணைகளை மதித்து நடக் காதவர்கள், நீதிமன்ற நடவடிக்கை களை பாதிக்கும் வகையில் அவை குறித்து எழுதுவோர், நீதிபதிகள் பாரபட்சமாக நடந்துகொள்வதாக புகார் கூறுவது ஆகியவை நீதி மன்ற அவமதிப்பாகக் கருதப்படும்.

இந்தக் குற்றம் புரிபவர்களுக்கு உயர் நீதிமன்றமோ மேல்முறையீட்டு நீதிமன்றமோ $100,000 வரையிலான அபராதம், மூன்று ஆண்டுகள் வரையிலான சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். மற்ற நீதிமன்றங்கள் $20,000 வரையிலான அபராதம், ஓராண்டு வரையி லான சிறை அல்லது இரண்டும் விதிக்க அதிகாரம் பெறுகின்றன.