நியாயமான விலையில் குப்பை மையம்

நியாயமான விலையில் குப்பை மையம்

1 mins read

விக்டோரியா தியேட்டர் மற்றும் கலை அரங்கம், ஆசிய நாகரீக அரும்பொருளகம், பழைய நாடாளுமன்ற இல்லம், நாடாளுமன்றக் கட்டடம் ஆகியவற்றுக்கு சேவையாற்றும் ஒருங்கிணைந்த குப்பை மையம் திருப்திகரமான, ஏற்றுக் கொள்ளக்கூடிய விலையில் விநியோகிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் கிரேஸ் ஃபூவுக்குப் பதிலாக நேற்று நாடாளுமன்றத்தில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் கோக் ஹெங் லியுனின் கேள்விக்குப் பதிலளித் தார்.

குப்பை மையத்துக்கு தேசிய கலைகள் மன்றம் செலுத் திய ஆலோசனைக் கட்டணம் குறித்து தலைமை தணிக் கையாளர் அலுவலகத்தின் அறிக்கைக்குப் பிறகு இந்த விவகாரம் வெளியில் வந்தது. இந்த ஒருங்கிணைந்த குப்பை மையத்துக்கான ஆலோசனைக்கு $410,000, குப்பை மையத்தை அமைப்பதற்கு $470,000 என்று தேசிய கலைகள் மன்றம் கட்டணம் செலுத்தியது.

கூடுதல் மதிப்பிலான பொறியியலைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தப்படாதிருந்தால், குப்பை மையத்தை அமைக் கும் செலவு இன்னும் அதிகமாகி இருக்கும் என்று விளக்கிய அமைச்சர் வோங், ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் குப்பை மையத்தை அமைப்பதற்குரிய சிக்கலான அம்சங்கள் பற்றி இன்னும் விரிவான விளக்கம் அளித்திருக்கலாம். இருப்பினும், இவற்றை மனதிற்கொண்டு எதிர்காலத்தில் அமைச்சு செயல்படும் என்றும் தெரிவித்தார்.