புது ரயில் நிலையம் கட்ட திட்டமில்லை

புது ரயில் நிலையம் கட்ட திட்டமில்லை

1 mins read
d3dafa37-94bb-47e5-b907-22e4dbf99532
-

கியட் ஹொங், சுவா சூ காங், எதிர்கால தெங்கா நகரம் ஆகிய பகுதிகளின் புதிய பிடிஓ வீடுகளில் குடியிருப்பாளர்கள் குடியேறவுள்ளனர். இதனால் பயணிகள் எண்ணிக்கை கூடினாலும் சுவா சூ காங், புக்கிட் கொம்பாக் நிலையங்களுக்கு இடையில் ஒரு புதிய எம்ஆர்டி நிலையம் கட்டுவதற்கு பயணிகள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரிவித்தார்.

சுவா சூ காங் குழுத் தொகுதி உறுப்பினர் ஸாக்கி முகம்மது கேட்ட கேள்விக்கு அமைச்சர் அவ்வாறு பதிலளித் தார். கூடுதல் எம்ஆர்டி நிலையத்தைக் கட்டுவதற்கு பயணிகள் எண்ணிக்கை கருத்தில் கொள்ளப்படுகிறது என்ற அமைச்சர், தமது அமைச்சு அப்பகுதியில் நடக்கும் மேம்பாடுகளைக் கண் காணிக்கும் என்றும் அப்படி அப்பகுதியில் பயணிகள் எண் ணிக்கை வலுவடைந்தால் மீண்டும் இம்முடிவு பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார்.