நீதித்துறை நிர்வாகம் (பாதுகாப்பு) மசோதாவிலுள்ள சட்டங்களை வரையறுக்க வேண்டியதன் அவ சியம் குறித்து சட்ட அமைச்சர் கா.சண்முகம் நேற்று நாடாளுமன் றத்தில் விளக்கமளித்தார். நீதிமன்ற அவமதிப்பாகக் கரு தப்படுபவை பற்றி விளக்கமளிக் கும் இந்த மசோதா குறித்து எழுப் பப்பட்ட விவகாரங்களை அவர் தெளிவுபடுத்தினார். மசோதாவை இரண்டாம் வாசிப் புக்குக் கொண்டு சென்ற திரு சண்முகம், நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் மட்டும்தான் முன்னைய தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ள சிங்கப்பூரின் ஒரே குற்றவியல் சட்டம் என்று கூறி னார். "இது ‚திருப்திகரமான தல்ல" என்று அவர் குறிப்பிட்டார்.
"குற்றவியல் சட்டங்கள் எழுத்து வடிவில் வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும்," என்றார் அவர். சென்ற மாதம் முதன்முதலாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய் யப்பட்ட இந்த மசோதா, நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் முக்கிய அம்சங்களைச் சட்டமாக ஒருங்கி ணைப்பதை இலக்காகக் கொண்டு உள்ளது. தற்போது, நீதிமன்ற அவ மதிப்புச் சட்டம் முந்திய நீதிமன்றத் தீர்ப்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மசோதாவின்கீழ், மூன்று வகை யான செய்கைகள் நீதிமன்ற அவம திப்பாகக் கருதப்படும். நீதிமன்ற ஆணைகளை மீறுதல், எடுத்துக் காட்டாக நீதிமன்றம் ஆணையிட்ட பணத்தைச் செலுத்த மறுத்தல், நீதிமன்ற நடவடிக்கைகளைப் பாதிக்கும் வகையில் அவை குறித்து எழுதுதல், நீதிபதிகள் பாரபட்சமாக நடந்துகொள்வதாகப் புகார் கூறுதல் ஆகியவை அந்தச் செய்கைகள்.
எவையெல்லாம் நீதிமன்ற அவ மதிப்பாகக் கருதப்படமாட்டா என்ப தற்கும் மசோதா விளக்கமளிக் கிறது. எடுத்துக்காட்டாக, நீதி மன்ற நடைமுறைகள் பற்றி நியாய மாகவும் துல்லியமாகவும் எழுது வதும் நீதிமன்ற ஆணையின் பொறுப்புகளை நேர்மையான, நியா யமான காரணத்தால் புரிந்துகொள் ளத் தவறியதால் நீதிமன்ற ஆணை யை மீறுவதும் நீதிமன்ற அவமதிப் பாகக் கருதப்படமாட்டா. மூன்று நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்தி ருந்த திருத்த மனுவில் குறிப் பிடப்பட்டிருந்த கருத்துகளுக்கும் திரு சண்முகம் விளக்கமளித்தார். நியமன நாடாளுமன்ற உறுப்பினர் களான திரு கொக் ஹெங் லியுன், இணைப் பேராசிரியர் மஹாதேவ் மோகன், குமாரி குயிக் ஷியவ் யின் ஆகியோர் மசோதாவில் செய்யப்படவேண்டிய 14 உத்தேச மாற்றங்களைத் தாக்கல் செய்தி ருந்தனர்.
திரு சண்முகம் சுட்டிக்காட்டிய உத்தேச திருத்தங்களில் ஒன்று "பாரபட்சம்" என்ற சொல்லுக்கு முன்பாக ‚"கடுமையான" என்ற சொல்லைச் சேர்க்குமாறு பரிந்து ரைத்தது. இதன்வழி, நீதிமன்ற நடைமுறையில் ‚"கடுமையான பாரபட்சம்" ஏற்படுத்தும் செயல் மட்டுமே நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படும். ஆனால் இது "சரி யல்ல"என்றார் திரு சண்முகம்.
நீதிமன்ற நடைமுறைகள் பற்றி நியாயமாகவும் துல்லியமாகவும் எழுதுவதும் நீதிமன்ற ஆணையின் பொறுப்புகளை நேர்மையான, நியாயமான காரணத்தால் புரிந்துகொள்ளத் தவறியதால் நீதிமன்ற ஆணையை மீறுவதும் நீதிமன்ற அவமதிப்பாகக் கருதப்படமாட்டா என்று அமைச்சர் சண்முகம் நேற்று விளக்கினார். கோப்புப்படம்

