எம்ஆர்டி நிலையத்தில் புகை

எம்ஆர்டி நிலையத்தில் புகை

1 mins read
dde64230-9755-42e3-a1a9-9e4bc1686b69
-

தஞ்சோங் பகார் எம்ஆர்டி நிலை யத்தை நேற்று பிற்பகலில் புகை சூழ்ந்தது. மேற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் ஒன்றின் குளிரூட்டியிலிருந்து ஒருவகை வாயு கசிந்ததன் விளை வாக புகை மூண்டதென எம்ஆர்டி நிறுவனம் பின்னர் தெரிவித்தது. பிற்பகல் 2.53 மணிக்கு அச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் எஸ்எம் ஆர்டி அலுவலர்கள் உடனடியாக அந்தப் புகையை வெளியேற்றும் முயற்சியாக சுரங்கப் பாதை காற் றோட்டக் கருவியை இயக்கியதா கவும் மார்கரெட் டியோ என்னும் அதிகாரி தெரிவித்தார்.

சம்பவத்திற்கு எம்ஆர்டி நிறு வனம் மன்னிப்புக் கேட்டுக்கொள் வதாகத் தெரிவித்த அவர், இத னால் ரயில் சேவைக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படவில்லை என் றார். பாதிக்கப்பட்ட ரயிலில் இருந்த பயணிகள் வேறொரு ரயிலுக்கு மாற்றப்பட்டதாக அவர் கூறினார். குளிரூட்டி கோளாற்றைச் சரி செய்வதற்காக சேவையிலிருந்து மீட்கப்பட்ட ரயில் உலு பாண்டான் பணிமனைக்கு அனுப்பப்பட்டதா கவும் குமாரி டியோ குறிப்பிட்டார். ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடைப்பட்ட துவாரம் வழியே புகை வந்துகொண்டு இருந்ததாகவும் மிகுந்த அடர்த்தியானதாகவும் கடுமையானதாகவும் அது இருந் தது என்றும் சோஃபியா கீ என் னும் பயணி தெரிவித்தார்.