விமானத்தில் ஆஸ்திரேலியர் மரணம்

விமானத்தில் ஆஸ்திரேலியர் மரணம்

1 mins read

ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்து கொண்டிருந்த சில்க்ஏர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஆஸ்திரேலிய ஆடவர் ஒருவர் மாண்டார் என்பதை அந்த விமான நிறுவனம் நேற்று முன்தினம் காலையில் உறுதிப்படுத்தியது. மாண்டவர் 71 வயது கிராஹேம் ஃபிரான்சிஸ். அவர் தமது மனைவி ஜூடியுடன் புக்கெட்டில் விடுமுறையைக் கழிக்க சென்று கொண்டிருந் தார்.

விமானத்தின் கழிவறையில் தமது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று கிராஹேமின் 45 வயது மகன் ரோனால்ட் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்சிடம் தெரி வித்தார். கழிவறையின் கதவு உடைக்கப்பட்டு, அவர் வெளியே கொண்டு வரப்பட் டார். சக பயணிகளான ஒரு மருத்துவரும் தாதியும் அவ ருக்கு உடனடி சிகிச்சை அளித்தனர். ஆனால் பலன் இன்றி கிராஹேம் மாண்டார்.