சிங்கப்பூரின் தேர்ந்தெடுக்கப் படும் அதிபர் முறையைப் பரிசீ லனை செய்ய பிரதமர் லீ சியன் லூங் அமைத்த அரசமைப்புச் சட்ட ஆணைக் குழு அதன் மறு ஆய்வை முடித்துக் கொண்டு அறிக்கையை நேற்று பிரதமரிடம் சமர்ப்பித்து உள்ளது. "இந்த மறுஆய்வில் பங் கேற்று தங்கள் கருத்துகளை அறிக்கை வாயிலாகவும் நேரடியா கவும் தெரிவித்த அனைவருக் கும் ஆணைக் குழு தன் நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறது. "தெரிவிக்கப்பட்ட வெவ்வேறு கருத்துகள் ஆணைக் குழுவின் பணிக்குப் பெரிதும் உதவியுள் ளது," என்று ஆணைக் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
அறிக்கையைப் பெற்றுக் கொண்ட பிரதமர் லீ, ஆணைக் குழுவின் அறிக்கையை அரசாங் கம் ஆராய்ந்து விரைவில் அதன் பதிலை வெளியிடும் என்று நேற்று தனது அறிக்கை மூலம் தெரிவித்தார். "இந்த ஆய்வறிக்கையைத் தயாரிப்பதில் சிறப்பாகப் பணி யாற்றிய ஆணைக் குழுவின் தலைவரான தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன், அதன் இதர உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதமர் தனது நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறார்," என்று பிரதமர் அலுவலக அறிக்கை கூறியது.
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட ஆணைக் குழு இவ்வாண்டு ஏப்ரல், மே மாதங்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிபர் முறை குறித்த பல்வேறு தரப்பினர் கருத்துகளைக் கேட்டறிந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

