உறுதியான, நீக்குப்போக்குத் தன்மை கொண்ட புதிய கான்கிரீட்

உறுதியான, நீக்குப்போக்குத் தன்மை கொண்ட புதிய கான்கிரீட்

1 mins read

உறுதியான, நீக்குப்போக்குத் தன்மைமிக்க கான்கிரீட்டை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அழுத்தத்திற்கு உட்படும்போது இந்தப் புதிய வகை கான்கிரீட் வளையுமே தவிர உடையாது. இந்தப் புதிய கண்டுபிடிப்புக்கு 'கான்ஃபிலெக்ஸ்பேவ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இது அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு சாலை அமைக்கப் பயன்படுத்தப்பட்டு சோதிக்கப்படும். இம்மாதிரி புதிய கான்கிரீட் வகைகளைக் கொண்டு சிங்கப்பூரில் போக்குவரவு சந்திப்புகள் போன்ற இடங்களில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலைகள் அமைக்க வழக்கமாக பயன்படுத்தப்படும் கான்கிரீட்டைவிட இது மேலும் கூடுதல் காலம் நிலைக்கக்கூடியது.

வழக்கமான கான்கிரீட்டைவிட புதிய கான்கிரீட் இரு மடங்கு உறுதியானது. சாலை அமைக்கப் பயன்படுத்தப்படும் இந்த கான்கிரீட் வழக்கமாக பயன்படுத்தப்படும் கான்கிரீட்டைவிட மெலிதாக இருக்கலாம். இதனால் சாலைகள் அமைக்கப்படும் இடங்களுக்கு இந்தக் கான்கிரீட்டை எளிதாகக் கொண்டு சென்று பொருத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சாலைகள் அமைக்கப்படும் இடங்களுக்கு இந்தக் கான்கிரீட்டை எளிதாகக் கொண்டு சென்று பொருத்தலாம் என்று கூறப்படுகிறது.