அல்ஜுனிட் நகரமன்றத்திற்கு அனுபவ ஊழியர்கள் தேவை

அல்ஜுனிட் நகரமன்றத்திற்கு அனுபவ ஊழியர்கள் தேவை

1 mins read
777b9d98-0bc2-41ee-bedc-42d4da616498
-

பாட்டாளிக் கட்சி நிர்வகித்து நடத்தும் அல்ஜுனிட் - ஹவ்காங் நகர மன்றத்தின் கணக்குகளில் தலைகாட்டியிருக்கும் பிரச்சினைகளுக்கு குறித்த காலத்தில் தீர்வு காணப்பட வேண்டுமென்றால் அந்த நகரமன்றத்திற்கு ஏற்புடைய அனுபவத்துடன் கூடிய மேலும் பல ஊழியர்கள் தேவை என்று தெரி விக்கப்பட்டிருக்கிறது. பாட்டாளிக் கட்சி தன்னுடைய இணையப்பக்கத்தில், அதன் கணக்குத் தணிக்கை நிறுவன மான கேபிஎம்ஜியின் ஐந்தாவது அறிக்கையை வெளியிட்டது. முந்தைய அறிக்கையில் எழுப்பப்பட்ட 17 தணிக்கை அம்சங்களில் மூன்றுக்கு மட்டும்தான் இந்த நகர மன்றம் தீர்வு கண்டிருக்கிறது. இன்னும் 82% அம்சங்களுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும் என்று தணிக்கையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

அல்ஜுனிட்- ஹவ்காங் நகரமன்றம் தன்னுடைய குறைபாடுகளைக் களைய அதற்கு மேலும் பல ஊழியர்கள் தேவை என்று கணக் குத் தணிக்கையாளர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இந்த நகர மன்றம் 18 தற் காலிகக் கணக்குகளில் 1 மில்லியனுக்கும் அதிக பரிவர்த்தனை களைக் கவனிக்க வேண்டியிருக் கிறது. இந்தப் பணிக்கு ஓராண்டு பிடிக்கும் என்று கேபிஎம்ஜி நிறுவனம் கூறுகிறது. பாட்டாளிக் கட்சி நகர மன்றம் கடந்த இரண்டு மாதங்களில் 599 பரிவர்த்தனைகள் தொடர்பான பணிகளை மட்டுமே பூர்த்தி செய்திருக்கிறது. கேபிஎம்ஜி நிறுவனம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு இந்த நகரமன்றத்தின் முன்னேற்ற அளவு அதிகரித் திருக்கிறது என்றாலும் நகர மன்றத்திற்கு ஏற்புடைய தகுதியுள்ள ஊழியர்கள் மேலும் தேவை என்று அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.