16 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு அணைக்கப்பட்ட தீ

16 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு அணைக்கப்பட்ட தீ

1 mins read
2d29dafb-6c87-4723-b33d-3a67d749c7a5
-

தெம்பனிஸ் ஸ்திரீட் 92ல் உள்ள சிகே பில்டிங் என்ற கட்டடத்தில் மூண்ட பயங்கரமான தீ, 16 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாக அணைக்கப்பட்டது. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்றுக் காலை சுமார் 8.47 மணிக்கு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், அந்தக் கட்டடத்தில் மூண்ட தீ வியாழக் கிழமை அதிகாலை சுமார் 6 மணிக்கு அணைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்தது.

தீயணைப்பின்போது காயம் அடைந்த தீயணைப்பாளர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிவிட்டதாகவும் அவர் மருத் துவ விடுப்பில் இருப்பதாகவும் இந்தப் படை நேற்று கூறியது. அந்தத் தீ விபத்து பற்றி முதன் முதலாக புதன்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குத் தெரிவிக்கப்பட்டது. தெம்பனிஸ் ஸ்திரீட் 92ல் உள்ள எண் 39வது கட்டடத்தின் 3, 4வது மாடிகளில் தீ கொழுந்து விட்டு எரிவதாக பிற்பகல் 2.45 மணிக்கு அது தெரிவித்தது. தீ மூண்டதை அடுத்து அந்தக் கட்டடத்திலிருந்து 67 பேர் அப்புறப் படுத்தப்பட்டதாக ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளித்த போலிஸ் குறிப்பிட்டது.

தெம்பனிஸ் சிகே பில்டிங்கில் மூண்ட தீ ஏற்படுத்திய சேதம். புதன்கிழமை மூண்ட தீ நேற்று அதிகாலை 6 மணிக்கு அணைக்கப்பட்டது. படம்: சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை