அலுவலகத்தில் கன்னக்களவு; சந்தேகப்பேர்வழி கைது

அலுவலகத்தில் கன்னக்களவு; சந்தேகப்பேர்வழி கைது

1 mins read

போலிஸ், 31 வயது ஆடவர் ஒருவரைக் கைதுசெய்திருக் கிறது. லோவர் டெல்டா ரோட்டில் இருக்கும் அலுவலகம் ஒன்றில் கன்னமிட்டு திருடப்பட்டது. அந்தச் சம்பவத்தில் இந்த ஆடவருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப் படுகிறது. இந்த விவரங்களை போலிஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. லோவர் டெல்டா ரோட்டில் இருக்கும் புளோக் 1092ல் செயல்படும் ஓர் அலுவலகத்தில் கன்னமிடப்பட்டதாக ஆகஸ்ட் 14ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணிக்குத் தனக்கு தகவல் வந்ததாக போலிஸ் அந்த அறிக்கையில் குறிப்பிட்டது.

அதுபற்றி போலிஸ் புலன்விசாரணை நடத்தியது. அதன் விளைவாக அந்தச் சந்தேகநபர் பிடிபட்டார். அவரை பொத்தோங் பாசிர் அவென்யூ 1ல் புதன்கிழமை மாலை 6 மணிக்குத் தாங்கள் கைதுசெய்ததாக போலிஸ் தெரிவித்தது. புலன்விசாரணை தொடர்வதாகவும் அது கூறியது. குற்றவாளி என்று தீர்ப்பானால் அந்தச் சந்தேகப்பேர்வழி குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்நோக்குகிறார். அவருக்கு 14 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க முடியும்.