மரினா பே மிதக்கும் மேடையில் தேசிய தின அணிவகுப்பு 2017

மரினா பே மிதக்கும் மேடையில் தேசிய தின அணிவகுப்பு 2017

1 mins read

அடுத்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பு மீண்டும் மரினா பே மிதக்கும் மேடைக்குத் திரும்புகிறது. தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று மாலை இந்தத் தகவலைத் தெரிவித் தார். இந்த ஆண்டு அணிவகுப்பை ஒரு வெற்றி என வர்ணித்த அமைச்சர் இங், அடுத்த ஆண்டு அணிவகுப்பை மிதக்கும் மேடையில் நடந்த தமது அமைச்சு முடிவெடுத்து உள்ளது என்று கூறினார். இந்த ஆண்டு நாட்டின் 51வது தேசிய தினத்தைக் கொண்டாடும் வகையில் புதிதாகக் கட்டப்பட்ட தேசிய விளையாட்டரங்கில் தேசிய தின அணிவகுப்பு நடைபெற்றது. 2007ஆம் ஆண்டிலிருந்து தேசிய தின அணிவகுப்பு மிதக்கும் மேடையில் ஏழு முறையும் பாடாங்கில் இரண்டு முறையும் நடைபெற்றுள்ளது.

தேசிய விளையாட்டரங்கின் அமைப்பு காரணமாக இவ் வாண்டு அணிவகுப்பில் வான்குடை சாகசம், போர் விமா னங்கள் சாகசம் போன்றவை இடம்பெறவில்லை. ஆக, அடுத்த ஆண்டு மரினா பே மிதக்கும் மேடையில் பார் வையாளர்கள் இந்த ஆண்டு பார்க்கத் தவறிய மேற்கண்ட சாகசங்களைப் பார்க்க முடியும். மேலும் மிதக்கும் மேடையில் தேசிய தின அணிவகுப்பை நடத்தும் செலவும் பன்மடங்கு குறையும் என்பது குறிப்பிடத் தக்கது.