பூன் கெங் வீவக அடுக்குமாடி வீடு $1.1மி. விலைக்கு கைமாறியது

பூன் கெங் வீவக அடுக்குமாடி வீடு $1.1மி. விலைக்கு கைமாறியது

2 mins read
71112ef4-0f92-401d-90c3-e82ea177dd57
-

பூன் கெங்கில் அமைந்துள்ள வடிவமைத்து கட்டி விற்கும் (DBSS) திட்டத்தின் கீழ் கட்டப்பட் டுள்ள சிட்டி வியூ வீட்டுத் திட்டத் தில் இடம்பெற்றிருக்கும் 28வது மாடி வீடு ஒன்று அண்மையில் பரபரப்பாக எங்கும் பேசப்பட்டது. இந்த ஆண்டில் கைமாறிய பொது அடுக்குமாடி வீடுகளில் இந்த வீடுதான் ஆக அதிக விலை வீடாக இருந்தது. இந்த வீடு $1.1 மில்லியன் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறது. வீடு கைமாற உதவிய தரகர் காவின் குவா, 28, என்பவர். இந்த வீட்டிலிருந்து பார்த்தால் விளை யாட்டு மையம், மரினா பே சாண்ட்ஸ், கடல் எல்லாம் தடை யின்றி எதுவுமே மறைக்காமல் தெள்ளத்தெளிவாக தெரியும்.

இதைப்பார்த்து மிகவும் மனம் கவர்ந்துபோன ஒரு தம்பதி இந்த விலை கொடுத்து இந்த வீட்டை வாங்கியிருக்கிறார்கள். தேசிய நாள் கொண்டாட்டத்தின்போதும் புத்தாண்டுக்கு முதல் நாள் இடம் பெறும் கொண்டாட்டங்களின் போதும் இடம்பெறும் வாணவேடிக் கைகளை இந்த வீட்டிலிருந்து அருமையாகப் பார்க்கலாம். இந்த வீட்டிற்கு அருகே கடைகள், உணவகங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் மேலாக பூன் கெங் எம்ஆர்டி நிலையம் பக்கத்திலேயே இருக் கிறது. இவை எல்லாம் இந்த வீடு இந்த விலைக்குக் கைமாற கார ணங்கள் என்று தரகர் திரு குவா தெரிவித்தார்.

இந்த வீட்டை விற்றவர் தன்னை திரு டான், 35, என்று மட்டும் கூறிக்கொண்டார். வீடு அமைந்திருக்கும் இடம் மிகவும் வசதியான இடம் என்பதால் இதை அந்த விலைக்கு விற்கலாம் என்று தான் நினைத்ததாக திரு டான் கூறியிருந்தார். திரு டானும் அவரின் மனைவி யும் இந்த ஐந்தறை வீட்டை 2008ல் சுமார் $700,000 விலைக்கு வாங் கினார்கள். இப்பொழுது இந்த வீட்டை விற்றதன் மூலம் அவர் களுக்கு $300,000க்கும் அதிக லாபம் கிடைத்திருக்கிறது. வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளின் மறுவிற்பனைச் சந்தை இப்பொழுது மந்தமாக இருக்கிறது. இருந்தாலும் இவற்றில் பெரும் பணத்தைப் போட அதிகம் பேர் நாட்டமாக இருக்கிறார்கள்.