கோலாலம்பூர் - சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டத்தை உருவாக்குவதற்கு உதவும் வகையில் கூட்டு உருவாக்க பங்காளி நிறு வனம் ஒன்று நியமிக்கப்படுகிறது. இதற்கான ஏலக்குத்தகையை சிங்கப்பூரும் மலேசியாவும் கூட் டாகக் கொடுக்கவிருக்கின்றன. சிங்கப்பூரின் நிலப் போக்கு வரத்து ஆணையமும் மலேசியாவின் MyHSR Corp நிறுவனமும் அந்தக் கூட்டு ஏலக்குத்தகைக்கு அழைப்பு விடுக்கும். இந்த இரண்டு அமைப்புகளும் நேற்று ஓர் அறிக்கையில் இந்த விவரங் களைத் தெரிவித்தன.
கோலாலம்பூர்- சிங்கப்பூர் அதி வேக ரயில் முறையின் செயல்முறை கள் தொடர்பான கொள்முதல் ஆலோசனைகளையும் தொழில் நுட்ப ஆலோசனைகளையும் திட்ட நிர்வாக ஆதரவையும் அந்தக் கூட்டு உருவாக்க பங்காளித்துவ நிறுவனம் வழங்கும் என்று எதிர் பார்க்கப்படுவதாக அறிக்கை குறிப்பிட்டது. விரைவு ரயில் திட்டத்துக்கான தொழில்நுட்ப, பாதுகாப்புத் தரங்களையும் அந்த நிறுவனம் உருவாக்கும். அதிவேக ரயில்- திட்டம் தொடர் பான ஏலக்குத்தகைகளுக்கான பத்திரங்களை உருவாக்குவதற் காக இருதரப்புகளிலும் அமைக்கப் பட்டுள்ள கூட்டுத் திட்டக் குழு விற்கு அந்தக் கூட்டு உருவாக்க பங்காளி நிறுவனம் உதவும் என் றும் அந்த அறிக்கை குறிப்பிட்டு உள்ளது.

