பேரிடர்களை நிர்வகிக்க தன்னால் ஆன அனைத்தையும் அரசாங்கம் செய்யும். ஆனால் பெரிய அளவில் பேரிடர் நிகழும்போது அரசாங்கம் மட்டும் அதை தனியாகச் சமாளித்துவிட முடியாது என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் தெரிவித்துள்ளார். பேரிடர்ச் சமாளிப்பு பற்றிய இரண்டாவது ஆசியான் உத்திக் கொள்கைக் கலந்துரையாடல் கூட் டத்தில் அவர் உரையாற்றினார். பேரிடர்களைச் சிறந்த முறை யில் கையாள அரசாங்கங்கள் தனியார் துறையைத் திறம்பட பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அந்தத் துறையுடன் மிகவும் அணுக்கமாக அரசாங்கம் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அறிவு, புத்தாக்கம், வளங்கள், கட்டமைப்பு வசதிகள் ஆகிய முக்கியமான வளங்களாகத் தனி யார் துறை திகழ முடியும் என்றார் அவர். பிலிப்பீன்ஸ் நாட்டில் 2014ல் ஹையான் சூறாவளி வீசி அந்த நாட்டைப் பாழ்படுத்திவிட்டது. அப்போது மலேசியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவன மான ஏர்ஏஷியா போன்ற நிறுவனங் கள் பணத்தைத் திரட்டி பிலிப்பீன்சுக்கு உதவின. மனிதாபிமான குழுக்களையும் உதவிப் பொருட்களையும் விமா னங்களில் இலவசமாக ஏற்றிச் சென்று அவை உதவி செய்தன. அமைச்சர் சண்முகம் இவற்றைத் தமது உரையில் எடுத்துக்காட் டாகக் குறிப்பிட்டார்.

