சமூக உதவி நிறுவன 'நல்ல காரிய விழா'

சமூக உதவி நிறுவன 'நல்ல காரிய விழா'

1 mins read
3583cdc5-073c-4bd4-9caf-916ad9a26999
-

சிங்கப்பூர் சமூக உதவி நிறுவன மையத்தில் அங்கம் வகிக்கும் நிறுவனங்கள் 200க்கும் அதிக வேலைகளை உருவாக்கியிருப்ப தாகவும் 3,000 பேருக்கும் அதிக மக்களுக்கு உதவியிருப்பதாகவும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின் தெரிவித்திருக்கிறார். சமூக உதவி நிறுவனங்களுக் கான சிங்கப்பூரின் முதலாவது விழா நேற்று தொடங்கியது. 'நல்ல காரிய விழா' என்று குறிப்பிடப்படும் அந்த விழாவில் 1,000 பேருக்கும் அதிக மக்கள் கலந்துகொண் டார்கள். சமூக உதவி மனப்பான் மையுடன் கூடிய 50 நிறுவனங்கள் அங்கு கூடங்களை அமைத்தன. மேடைக் கலை நிகழ்ச்சிகள் நடத் தப்பட்டன.

இந்த விழாவின் இரண்டாவது நாளன்று தீவு முழுவதும் உள்ள பல்வேறு சமூக உதவி நிறுவனங் களில் ஏழு பயிலரங்குகள் நடந்தன. நிறுவனங்களின் சமூக உதவி மனப்பான்மை பற்றிய புரிந் துணர்வை பொதுமக்களிடையே மேம்படுத்துவது இந்த இரண்டு நாள் விழாவின் நோக்கம். சமூக உதவி நிறுவனங்களுக்கு அதிக அமைப்புகளும் அதிக மக்களும் ஆதரவு தரும்படி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஓர் இயக்கமும் இந்த விழாவின் போது தொடங்கப்பட்டது. இந்த ஆண்டின் இறுதியில் இரண்டாவது சிங்கப்பூர் சமூக நிறுவன மாநாடு ஒன்று நடை பெறும் என்றும் இந்த மையம் அறிவித்திருக்கிறது.

சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின், ரொட்டி தயாரிப்புத் தேர்ச்சிகளைக் கற்கும் சிறப்பு உதவி தேவைப்படுவோருடன் உரையாடுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்