சிங்கப்பூர் இந்தியர்களின் புகழ் கூறும் புதிய நூல்

சிங்கப்பூர் இந்தியர்களின் புகழ் கூறும் புதிய நூல்

1 mins read
8248c187-3cba-4773-b1af-11bfffeab3f4
-

சிங்கப்­பூ­ரின் 50 ஆண்டுகால வளர்ச்­சி­யில் இந்திய சமூகம் ஆற்றிய பங்கை எடுத்­துரைக்­கும் நூல் ஒன்று நேற்று முன்தினம் அறி­மு­கம் கண்டது. '50 Ye­a­rs of In­di­an Co­m­m­u­ni­ty in Si­n­g­ap­o­re' எனும் தலைப் பிலான நூலை பொதுத் தூதர் பேரா­சி­ரி­யர் டாமி கோ இந்திய மர­புடைமை நிலை­யத்­தில் வெளி­யிட்டுப் பேசினார். "கல்வியைப் பொறுத்­த­வரை இந்­தி­யர்­கள் நல்ல தேர்ச்சி கண்­டி­ருக்கிறார்கள். 2010ஆம் ஆண் டில் 35 விழுக்­காட்டு இந்­தி­யர்­கள் மேல்நிலை கல்வித் தேர்ச்சி பெற்­ற­னர். இது தேசிய சராசரி அளவை விட சுமார் 12% அதிகம். "இந்­தி­யர்­கள் பலர் சட்­டத்­துறை­யி­லும் பொதுத் துறை­யி­லும் முக்கிய பொறுப்­பு­களில் பதவி வகிக்கிறார்கள். இவர்­களின் வெற்­றியை நாம் கொண்டாட வேண்டும்," என்றார் பேரா­சி­ரி­யர் டாமி கோ.

'வோர்ல்ட் சைன்­டி­ஃ­பிக்' பதிப்­ப­கம் வெளி­யிட்ட நூலில் மொத்தம் 16 கட்­டுரை­கள் இடம்­ பெற்­று­ள்ளன. சிங்கப்­பூ­ரின் பொரு­ளி­யல் வளர்ச்­சியிலும் கலை வளர்ச்­சி­யிலும் இந்­தி­யர்­களின் பங்கு, பார்சிகள், பாகிஸ்­தா­னிய சமூ­கங்களின் வரலாறு பற்றிய கட்­டுரை­கள் நூலில் இடம் பெற்றுள்ளன. பற்பல துறை வல்­லு­நர்­கள் நூலில் இடம்பெற்ற கட்­டுரை­களை எழு­தி­யுள்­ள­னர். முன்னாள் அதிபர் எஸ். ஆர். நாதன் முன்­னுரை வழங்கியுள்ளார். முதலில் சிங்கப்­பூ­ரின் சீன, மலாய்/முஸ்லிம் சமூகங்கள் பற்றிய நூல்கள் வெளி­யி­டப்­பட்­டன. அவற்­றுக்­குக் கிடைத்த நல்ல வர­வேற்பைத் தொடர்ந்து இங்­குள்ள இந்திய சமூகம் குறித்த இந்த நூல் அறி­மு­கம் கண்­டுள்ளது.

நூலாசிரியர்களுள் ஒருவரான பொதுத் தூதர் திரு கோபிநாத் பிள்ளை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்