தேர்ச்சிமிக்க ஊழியரணியைக் கொண்டுதான் வலுவான பொருளியலை அமைக்க முடியும் என்று தமது தேசிய தினப் பேரணி உரையில் குறிப்பிட்ட பிரதமர், ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தி, சிறந்த வேலைகளை அவர்கள் தக்கவைத்துக் கொள்ளவும் நல்ல ஊதியத்தை ஈட்டவும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம் மிகவும் அவசியம் என்று வலியு றுத்தினார். புதிய பொருளியலுக்கு ஏற்ற வாறு பொருத்தமான, தேவையான தேர்ச்சிகளை சிங்கப்பூர் மாண வர்கள் கற்றுத் தேர்ந்து அவர் களைத் தயார்ப்படுத்துவதற்காக இங்குள்ள கல்வி நிலையங்கள் புதிய பாடத்திட்டங்களை வழங்கி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இப்போது பணியில் உள்ளவர்களும் தங்களது திறன்களை மேம்படுத்தி தமது துறையில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம் உதவி வருவதையும் அவர் குறிப்பிட்டார். அப்படி ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம் மூலம் பயன்பெற்று தமது துறையில் முன்னேறிய ஒருவராக திருவாட்டி ஜனெசா புவனேஸ்வரி குமரனை அவர் குறிப்பிட்டுப் பேசினார். மசெக அறநிறுவன பாலர் பள்ளி ஆசிரியையாகச் சேர்ந்தார் அவர். பின்னர் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கல்வி உதவி நிதியுடன் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி யில் ஆரம்பகால குழந்தைப்பருவ தலைமைத்துவத்தில் சிறப்புப் பட்டயம் பெற்ற அவர் இப்போது மூத்த ஆசிரியையாக உயர்ந்து இருக்கிறார்.
பாலர் பள்ளி ஆசிரியராகச் சேர்ந்து, ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கல்வி உதவி நிதியின் மூலம் நீ ஆன் பலதுறைத்தொழிற்கல்லூரியில் பட்டயக் கல்வி பயின்று இன்று மூத்த ஆசிரியையாக தம்மை உயர்த்திக்கொண்டுள்ள திருவாட்டி ஜனெசா புவனேஸ்வர் குமரன். படங்கள்: தொடர்பு, தகவல் அமைச்சு

