ரொட்டி செய்யும் இயந்திரத்தை அறிமுகப்படுத்திய தம்பதியர்

ரொட்டி செய்யும் இயந்திரத்தை அறிமுகப்படுத்திய தம்பதியர்

1 mins read
80538c21-ad78-474e-93b2-3387dd169947
-

தொழில்முனைப்பை ஊக்கு விப்பது குறித்துப் பேசியபோது, உலகின் முதல் சப்பாத்தி, ரொட்டி செய்யும் இயந்திரத்தை அறிமுகப்படுத்திய திருவாட்டி பிரனோத்தி நாகர்கர், அவருடைய கணவர் ரி‌ஷி இஸ்ரானி ஆகியோரை உதாரணமாகக் குறிப்பிட்டார் பிரதமர் லீ.

மாவு, எண்ணெய், தண்ணீரை இயந்திரத்தில் போட்டு ஒரு பொத்தானை அழுத்தினால் போதும், நிமிடத்திற்கு ஒன்று என சூடான சப்பாத்தி அல்லது ரொட்டி நமக்குக் கிடைத்துவிடும். ஸ்பிரிங் அமைப்பின் உதவியுடன் சந்தைப்படுத்தப்பட்ட இந்த இயந்திரத்திற்கு அனைத் துலக அளவிலும் நல்ல வரவேற்பு கிட்டியிருப்பதாகத் திரு லீ குறிப்பிட்டார்.

சப்பாத்தி, ரொட்டி தயாரிக்கும் 'ரொட்டிமேட்டிக்' இயந்திரத்துடன் அதை உருவாக்கிய தம்பதியர் திருமதி பிரனோத்தி நாகர்கர் (வலது) - திரு ரி‌ஷி இஸ்ரானி.