சிங்கப்பூரிலுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து முன்னேறி உலகில் சிங்கப்பூரின் இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள நாம் நல்ல அரசியலைக் கொண்டிருக்க வேண்டும் என்று தமது தேசிய தினப் உரையில் குறிப்பிட்ட பிரதமர் லீ, அதை எவ்வாறு உறுதி செய்யலாம் என்பது பற்றியும் விளக்கினார். முன்னதாக, சிங்கப்பூரின் அரசியல் அமைப்பு சரியாக செயல் படாமல் போனால், நல்ல நம்பகமான தலைவர்களை நாம் தேர்ந்தெடுக்கத் தவறினால் அல்லது நம்மால் ஒற்றுமையாக செயல்பட முடியாமல் போனால் அதன்பின் நாட்டு முன்னேற்றுத் துக்காக நாம் போடக்கூடிய திட்டங்கள் அனைத்தும் வீண் என்று பிரதமர் தெளிவு படுத்தினார்.
இதற்கு உதாரணமாக அவர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக அந்நாட்டில் நடந்த பொது வாக்கெடுப்பு பேசினார். நல்ல அரசியலின் முக்கியத்து வத்துக்கு அது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறிய பிரதமர், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறு வது என்று முடிவெடுத்தவுடன் பிரிட்டனின் பவுண்டு நாணயம் வீழ்ச்சி கண்டது என்றும் வேலை வாய்ப்புகள் அந்நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கியதாகவும் கூறினார்.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றி யத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று பிரசாரம் செய்த தலைவர்கள் வாக்காளர்களிடம் உண்மையான தகவல்களைக் கூறவில்லை என் றும் பொது வாக்கெடுப்பு முடிந்த கையோடு அவர்கள் விலகி விட்டார்கள் என்றும் பிரிட்டன் எவ்வாறு ஒ ன் றி ய த் தி லி ரு ந் து வெளியேறுவது, அதன் பின் நடக்கக்கூடியது என்னென்ன இவை எல்லாவற்றையும் மற்ற வர்கள் தீர்மானிக்க விட்டு விட் டனர் என்பதை பிரதமர் நினைவூட்டினார்.

