எல்டர்ஷீல்டு காப்புறுதித் திட்டத் தில் செய்யக்கூடிய மேம்பாடுகளை ஆராய்வதற்குச் சுகாதார அமைச்சு ஒரு குழுவை அமைக் கும் எனப் பிரதமர் லீ நேற்று அறிவித்தார். எல்டர்ஷீல்டு திட்டம் 2002ம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து இதுவரை 7,000க்கும் மேற்பட் டோர் பயனடைந்திருப்பதாக தேசிய தினக் கூட்டத்தில் ஆற்றிய மாண்டரின் உரையில் திரு லீ குறிப்பிட்டார். ஆனால், இத்திட்டம் எல்லோரையும் உள்ளடக்கவில்லை என்பதாலும் வழங்குதொகைகளின் ஆறு ஆண்டு காலகட்டம் போதாமல் இருக்கக்கூடும் என்பதாலும் திட்டம் மேம்படுத்தப்படுவது அவசியம் என்றார் அவர்.
திட்டத்தின்கீழ் இடம்பெறும் முதியவர்களால் சொந்தமாகக் குளிக்கவோ அல்லது சாப் பிடவோ இயலாவிட்டால், அல் லது சக்கர நாற்காலியைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அல்லது படுத்த படுக்கையானால், அவர்களது தாதிமை, பராமரிப்புத் தேவை களுக்கு அல்லது பணிப் பெண்ணை வேலைக்கு அமர்த்தும் செலவுக்கு உதவியாக எல்டர்ஷீல்டு திட்டம் மாதந்தோறும் சில நூறு வெள்ளி வழங்குதொகை தருகிறது. "எல்டர்ஷீல்டு திட்டம் இன்னும் அதிகமானோருக்குப் பயனளித்து, அதிகப் பாதுகாப்பு வழங்கி, கட்டுப்படியாகும் அளவில் இருக்கமுடியும் என நம்புகிறோம்," என்றார் அவர்.

