அமைச்சரவை மாற்றங்கள்

அமைச்சரவை மாற்றங்கள்

1 mins read
93b0afa5-1d12-40dc-8450-c323b944d378
-

நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் முழுமையாக உடல்நலம் தேறி தமது பணிக்குத் திரும்புகிறார். இதையடுத்து, தற்காலிக நிதியமைச்சராக பொறுப்பு வகித்து வந்த துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் அந்தப் பொறுப்பில் இருந்து விலகுகிறார். திரு லாரன்ஸ் வோங் இரண்டாவது நிதி அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார். தேசிய வளர்ச்சி அமைச்சராகவும் அவர் தொடர்வார். திருவாட்டி சிம் ஆன் வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். கலாசார, சமூக, இளையர் துறை மூத்த துணை அமைச்சர் பொறுப்புகளையும் அவர் தொடர்வார். நிதித் துறை மூத்த துணை அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகுகிறார். இந்த மாற்றங்கள் நேற்று முதல் நடப்புக்கு வந்தன.

நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், திரு லாரன்ஸ் வோங், திருவாட்டி சிம் ஆன்