தர்மன்: சிங்கப்பூரே திரு நாதனின் மூச்சு

தர்மன்: சிங்கப்பூரே திரு நாதனின் மூச்சு

1 mins read

மறைந்த முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதன் நாட்டிற்காகத் தம்மை அர்ப்பணித்து, நாட்டிற்காகவே வாழ்ந்து, நாட்டையே தமது மூச்சாகக் கருதியவர் என்று துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் புகழாரம் சூட்டியுள்ளார். "அனைத்துத் தரப்பு மக்களுடனும் அவர்கள் எந்த இன, சமயத்தவராக இருப்பினும் நட்புறவு கொண்டு விடுவார். மிகவும் எளிமையானவர். அவரது நினைவுத்திறன் அபாரமானது. தம் வாழ்வில் சந்தித்த எல்லாரையும் எதிர்கொண்ட நிகழ்வுகள் அனைத்தையும் அவர் நினைவில் வைத்திருந்தார்.

இறுதி வரைக்கும் துடிப்புடன் இருந்த அவர், பிறருடனான தொடர்பைக் கைவிட்டதே இல்லை. சில மாதங்களுக்குமுன் அவர் எனக்கும் மற்றவர்களுக்கும் கடிதங்கள் அனுப்பினார். பல விஷயங்களில் தமது நுணுக்கமான கண்ணோட்டத்தையும் அறிவுரைகளையும் அழகான கையெழுத்தில் அவர் எழுதியிருந்தார். வாழ்க்கை மீது அவருக்கிருந்த நேசம், நாட்டிற்காக அவர் ஆற்றிய பங்களிப்புகள், இவற்றையெல்லாம் பார்க்கும்போது திரு நாதனை எப்போதுமே மறக்க முடியாது," என்றார் அவர்.

அமரரான நாதனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பும் துணைப் பிரதமர் தர்மன், அவரது துணைவியார் (வலது).