ஜி.கே.வாசன்: நாங்கள்தான் உண்மையான காங்கிரஸ்

ஜி.கே.வாசன்: நாங்கள்தான் உண்மையான காங்கிரஸ்

1 mins read
1ae16c3d-1e9b-44a1-bb8f-cb7689250e7b
-

புதுக்கோட்டை: தமாகா தான் தமிழகத்தில் இன்றைய தேதியில் உண்மையான காங்கிரஸ் என அதன் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக காங்கிரஸ் கட்சி தலைமையின் மீதான நம்பிக்கையை இழந்த தலைவர்கள் சிலரே தம்மைப் பற்றி விமர்சித்து வருவதாகக் கூறினார். "நான் காங்கிரஸ் கட்சி யிலிருந்து விலகி வெகு தூரம் சென்றுவிட்டேன். தற்போது தமாகா, காங்கிரஸ் போல செயல்படுகிறது. தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிக்க முடியாமல் கட்சித் தலைமை திண்டாடி வரும் நிலையில், தமாகாவை விமர்சித்துதான் காங்கிரஸ் கட்சியின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவர்கள் விமர்சனம் செய்கின்றனர்," என்றார் வாசன்.

காவல்துறை மானியக் கோரிக்கை விவாதத்தை எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தியது சரியல்ல என்று குறிப்பிட்ட அவர், எதிர்க் கட்சிகளுக்கும் பேரவையில் உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றார். "திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் காய்ச்சலால் சிலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. சுகாதாரத் துறை உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரிழப்பு களைத் தடுக்கவேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத் திய, மாநில அரசுகள் உரிய நிதியை ஒதுக்க வேண்டும்," என்றார் வாசன்.