சமூக உண்டியலுக்கு எஸ்பிஎச் $350,000 நன்கொடை

சமூக உண்டியலுக்கு எஸ்பிஎச் $350,000 நன்கொடை

1 mins read

சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனமும் எஸ்பிஎச் அறநிறுவனமும் இணைந்து சமூக உண்டியலுக்கு $350,000 வழங்கியுள்ளது. இதன் தொடர்பான காசோலை வழங்கும் நிகழ்ச்சி நேற்று எஸ்பிஎச் நியூஸ் செண்டரில் நடைபெற்றது. இந்தத் தொகையிலிருந்து $150,000 வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த உடற்குறையுள்ள, சிறப்பு தேவைகளுடைய மாணவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு கல்வி உதவி நிதிக்கு வழங்கப்படும். மீதமுள்ள $200,000 தொகையிலிருந்து $100,000, முதியோர் வசதிகுறைந்த குடும்பங்களுக்கு சேவையாற்றும் 10 அறக்கட்டளைக்கு வழங்கப்படும். எஞ்சிய $100,000 வசதிகுறைந்த உடற்குறையுள்ள பிள்ளைகளுக்கான 10 அறநிறுவனங்களுக்கு வழங்கப்படும். எஸ்பிஎச் நிறுவனம் எஸ்பிஎச் அறநிறுவனம் ஆகியவற்றின் தலைவர் டாக்டர் லீ பூன் யாங் சிறப்பு விருந்தினராக நேற்றைய நிகழ்வில் கலந்து கொண்டார். சுமார் 300 பேர் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.