குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஏமஸ்

குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட ஏமஸ்

1 mins read

போலிஸ் நிலையத்தில் தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்ளாததன் பேரில் தம்மீது சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை நேற்று முன்தினம் ஒப்புக்கொண்ட ஏமஸ் யீ, நேற்று மேலும் மூன்று குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். முதல் நாள் வழக்கு விசாரணையின்போது குற்றச் சாட்டுகளை ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவித்த ஏமஸ் யீ பிறகு தனது மனதை மாற்றிக் கொண்டார். சமயம் தொடர்பாக மனம் புண்படும் கருத்துகளைத் தெரிவித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இஸ்லாமியர்களின் மனம் புண்படும் வகையில் ஃபேஸ்புக்கிலும் வலைப் பதிவிலும் கருத்துகளைப் பதிவேற்றம் செய்ததையும் கிறிஸ்துவர்களின் மனம் நோகும் வகையில் இணையத்தில் காணொளி ஒன்றைப் பதிவேற்றம் செய்ததையும் 17 வயது ஏமஸ் யீ ஒப்புக்கொண்டார்.

இந்தக் குற்றங்கள் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துக்கும் இவ்வாண்டு ஏப்ரல் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்தன. ஏமஸ் யீக்கு எதிராகப் பதிவு செய்யப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் அதிகபட்ச மாக மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். வழக்கறி ஞர்கள் யாராலும் பிரதிநிதிக் கப்படாத ஏமஸ் யீக்கு எதிராக இன்னும் மூன்று குற்றச்சாட்டுகள் உள்ளன. அவற்றை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்னொரு நாள் அளிக்கப்படும்.