கணக்குத் தணிக்கை தரம் உயர நடவடிக்கை

கணக்குத் தணிக்கை தரம் உயர நடவடிக்கை

1 mins read

சிங்கப்பூர் நிதிச் சந்தையின் மீது முதலீட்டாளர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் கட்டிக்காக்க கணக்குத் தணிக்கை நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை ஆணையம் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஆணையம் நடத்தும் சோதனைகளில் இரண்டுக்கும் அதிகமான தடவை தோல்வி அடையும் கணக்காளர்களின் பெயர்கள் அதன் இணையப்பக்கத்தில் குறிப்பிடப்படும். இன்னொரு கணக்காளரின் கண்காணிப்பின்றி இவர்கள் செயல்படமுடியாது. புதிய விதிமுறை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தொடங்குகிறது.