சூதாட்டக் கூடங்களில் திருடிய இருவருக்கு தண்டனை அதிகரிப்பு

சூதாட்டக் கூடங்களில் திருடிய இருவருக்கு தண்டனை அதிகரிப்பு

1 mins read

இரு­பு­ற­மும் ஒட்­டக்­கூ­டிய நாடாவை உள்­ளங்கை­களில் ஒட்­டிக்­கொண்டு மரினா பே சேண்ட்ஸ், ரிசார்ட்ஸ் வோர்ல்ட் செந்தோசா ஆகிய இடங்களில் உள்ள சூதாட்­டக் கூடங் களில் 60க்கும் அதி­க­மான வாடிக்கை­யா­ளர்­களி­ட­மி­ருந்து $100,225 மதிப்­பி­லான சூதாட்ட வில்லை­களை சீனாவைச் சேர்ந்த மூவர் திரு­டி­யுள்­ள­னர். மூன்று வார கால திருட்­டுச் செயல்­களுக்­குப் பிறகு ஸெள ஹைமிங், 41, லௌ ஜியாங்கோ, 37, ஆகிய இரு­வ­ரும் சீனா­வுக்­குத் திரும்­பி­னர்.

ஆனால் 10 நாட்­களுக்­குப் பிறகு மீண்டும் சிங்கப்­பூர் வந்து மரினா பே சேண்ட்­ஸுக்­குள் நுழைய முற்­பட்­ட­போது இரு­வ­ரும் பிடி­பட்­ட­னர். அவர்­கள் இரு­வ­ருக்­கும் சென்ற மே மாதத்­தில் 18 மாத சிறைத் தண்டனை விதித்து கீழ் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. அரசுத் தரப்­பில் மேல்­முறை­யீடு செய்­யப்­பட்­டதை அடுத்து அவர்­கள் மீதான தண்டனை நேற்று ஈராண்­டு­களுக்கு உயர்த்­தப்­பட்­டது. இந்தக் கும்ப­லின் மூன்றா­வது நபரான ஹுவான் சியாமெய் எனும் பெண் தேடப்­பட்டு வரு­கிறார். ஸெள, லௌ ஆகிய இரு­வ­ரும் ஹுவாங்கை மரினா பே சேண்ட்ஸ் சூதாட்­டக்­ கூ­டத்­தில் சந்­தித்து வில்லை­கள் திரு­டு­வது பற்றி அறிந்­து­கொண்ட­னர். திருடியதில் 20% ஹுவாங்­குக்கு வழங்கினர்.