பேருந்தில் சிறுமி மானபங்கம்; 77 வயது முதியவருக்குச் சிறை

பேருந்தில் சிறுமி மானபங்கம்; 77 வயது முதியவருக்குச் சிறை

1 mins read

பேருந்து ஒன்றில் 14 வயதுச் சிறு­மியை மான­பங்கப்­படுத்­திய குற்­றத்­திற்­காக 77 வயது ஆட­வ­ருக்கு ஐந்து வார சிறைத் தண்டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. சம்லாவி ஹாஜி சிராட் எனும் அந்த ஆடவர் தெம்ப­னிஸ் அவென்யூ 7ல் ஒரு பேருந்­தில் கடந்த ஆண்டு பிப்­ர­வரி ஆறாம் தேதி பயணம் செய்­து­கொண்­டி­ருந்த­போது அந்தச் சிறுமியின் தொடை யைத் தொட்டதை ஒப்­புக்­கொண்டார். 32 ஆண்­டு­கால திருமண வாழ்க்கைக்­குப் பிறகு சம்லாவி விவா­க­ரத்­துப் பெற்­ற­வர் என்றும் ஆயுதப் படை, போலிஸ் படையில் தொண்­டூ­ழி­யம் புரிந்த­வர் என்றும் சம்­லா­வி­யின் வழக்­க­றி­ஞர் ஜி தின­க­ரன் கூறினார். ஆறு பிள்ளை­களுக்­குத் தந்தை­யும் தாத்­தா­வு­மான சம்லாவி விசா­ரணையில் ஒத்­துழைத்­த­தா­க­வும் தமது செய்கை­களுக்­காக வருத்­தப்­பட்­ட­தா­க­வும் திரு தின­க­ரன் சொன்னார். சம்­லா­விக்கு ஈராண்­டு­கள் வரை சிறைத் தண்டனை­யும் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம்.