ரங்கூன் ரோட்டில் நிகழ்ந்த சாலை விபத்து ஒன்றில் ஒரு காருக்கு அடியில் மாட்டிக்கொண்ட மோட் டார்சைக்கிள் ஓட்டியை வழிப் போக்கர்கள் காப்பாற்றினர். அந்த விபத்து ரங்கூன் ரோடும் ஸ்டார்லைட் ரோடும் சந்திக்கும் இடத்தில் எண் 89 ரங்கூன் ரோட்டில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து அந்தப் படை பல வாகனங்களைச் சம்பவ இடத்துக்கு அனுப்பியது. அந்த விபத்தில் ஒரு காரும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் சம் பந்தப்பட்டிருந்ததாக போலிஸ் தெரிவித்தது. விபத்து நிகழ்ந்ததை யடுத்து அங்கு 10 பேர் கூடியதாக வும் அவர்கள் காருக்கு அடியில் சிக்கிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டியைக் காப்பாற்றிய தாகவும் மசோன் லிம், 24, என்ப வர் கூறியதாக ஷின் மின் டெய்லி நாளிதழில் தெரிவித்தது.
பிறகு அந்த மோட்டார்சைக்கிள் ஓட்டி டான் டோக் செங் மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட் டார். அவருக்கு காலில் அடிபட்ட தாகத் தெரிகிறது. விபத்தில் சிக்கிய காரை ஓட்டி வந்த 39 வயது மாது காயமின்றி தப்பினார். அவர் அதிர்ச்சியடைந்து சம்பவ இடத்திலேயே இருந்து விபத்தில் காயம் அடைந்தவரைக் கவனித்த தாக அந்தப் பத்திரிக்கை கூறியது. இச்சம்பவம் பற்றி புலன்விசாரணை நடக்கிறது.
விபத்தில் சிக்கிய காரும் மோட்டார்சைக்கிளும். படம்: ஷின் மின் வாசகர்

