இயற்கை வளத்தை அனுபவித்து வாழ சிங்கப்பூரர்களுக்கு மேலும் வாய்ப்புகள் கிடைக்கவிருக்கின் றன. சிங்கப்பூர் பூமலையில் நீர் சூழ்ந்த காட்டுவளத்தை அப்படியே கட்டிக்காக்க திட்டங்கள் அமலாக இருக்கின்றன. பூமலையின் ஒரு பகுதியில் காணப்படும் நன்னீர் காட்டையும் அதன் தாவர, விலங்கு வளத் தையும் கட்டிக்காப்பதற்கான திட் டங்களை தேசிய பூங்காக் கழக மும் கெப்பல் நிறுவனமும் நேற்று அறிவித்தன. பூமலையின் 'காடுகளைப் பற்றி கற்போம்' என்ற திட்ட விரிவாக்க இடத்தில் இடம்பெற்றுள்ள அந்தக் காடு 1.8 ஹெக்டர் நிலப்பரப்பில் விரிந்திருக்கிறது.
அந்தக் காட்டுவளத்தைக் கட்டிக்காக்கும் திட்டத்திற்கு 'கெப்பல் டிஸ்கவரி வெட்லண்ட்ஸ்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதற்கு கெப்பல் நிறுவனம் ஆதரவு தருகிறது. அந்தத் திட்டத்திற்காக தான் $2.08 மில்லியன் தொகை தருவ தாக இந்நிறுவனம் அறிவித்திருக் கிறது. திட்ட வெளியீட்டு நிகழ்ச்சி யில் தேசிய வளர்ச்சி அமைச்சரும் இரண்டாம் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் கலந்துகொண்டார். சிங்கப்பூரின் தாவர, விலங்கு வளத்தைக் கட்டிக்காக்க வேண் டியதன் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார். "பூமலைப் பகுதியில் அமைந் திருக்கும் ஊசியிலைக்காடு சிங் கப்பூருக்கு மிகவும் விலை மதிப்புமிக்க ஒன்று. சிங்கப்பூரில் எஞ்சியிருக்கும் காட்டு வளங் களில் அதுவும் ஒன்று.
"அங்குள்ள சில மரங்களுக்கு வயது ஏறக்குறைய 200 இருக் கும்," என்று அமைச்சர் குறிப்பிட் டார். காட்டுவளத்தைக் கட்டிக்காக் கும் திட்டம் நிறைவேற்றி முடிக் கப்படும்போது அந்தப் பகுதி பல்வேறு கருப்பொருளுடன் கூடிய காட்டுவள வசிப்பிடங்களைக் கொண்டிருக்கும். அதன் ஊடே நடந்து போவதற்கான வழிகளும் நடைமேடைகளும் அமைக்கப்பட் டிருக்கும்.
தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் (வலது), கெப்பல் நிறுவனத் தலைவர் டாக்டர் லீ பூன் யாங் இருவரும் புதிய திட்டத்தின் வரைபடத்தைப் பார்வையிடுகின்றனர். படம்: தேசிய பூங்காக் கழகம்

