பயங்கரவாதம், பொருளியல் பற்றி சிங்கப்பூரர்கள்கவலை

பயங்கரவாதம், பொருளியல் பற்றி சிங்கப்பூரர்கள்கவலை

2 mins read
3f9a24d4-3512-4069-9f8c-849adacd6e15
-

பயங்கரவாதத் தாக்குதலைச் சமாளிக்கும் வகையில் சிங்கப்பூரர்களை முற்றிலும் ஆயத்தமாக்குவதற்கு இன்னும் ஏராளமான காரியங்களைச் செய்யவேண்டி இருக்கிறது என்று வெளியுறவு, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் ஜோசஃபின் டியோ தெரிவித்திருக்கிறார். தோ பாயோ மையத்தில் நடந்த ஒரு கருத்தறியும் கூட்டத்தில் அவர் நேற்று இவ்வாறு தெரிவித் தார். அரசாங்கக் கருத்தறிவும் 'ரீச்' அமைப்பும் மீடியாகார்ப் நிறுவ னத்தின் '938 லைவ்' வானொலி யும் ஏற்பாடு செய்த அந்தக் கருத் தறியும் கூட்டத்தில் வாழ்க்கையின் அனைத்துத் தரப்புகளையும் சேர்ந்த சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.

தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் விடுத்த பல அறிவிப்புகள் பற்றிய சிங்கப்பூரர்களின் கருத்து களை, யோசனைகளை, எண்ணங் களைச் செவிமடுக்கும் நோக்கத் தில் அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு விக்ரம் நாயரும் சக்தியாண்டி சுப்பியாட்டும் தலைமை வகித்தனர். அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர் களிடம் அமைச்சர் பேசினார். 'சிங்கப்பூர் பாதுகாப்பு' (SG Secure) என்ற ஒரு புதிய தேசிய இயக்கம் அடுத்த மாதம் தொடங்க விருக்கிறது.

பிரதமர் லீ சியன் லூங் அதை தொடங்கிவைக்க இருக்கிறார். பயங்கரவாத மிரட்டல் களைச் சமூக ரீதியில் சமாளிக்கக் கூடிய சிங்கப்பூரின் ஆற்றலை மேம்படுத்துவது அந்த இயக்கத் தின் நோக்கம். தாக்குதலிலிருந்து சிங்கப்பூரர்கள் தங்களை சிறப்பான முறையில் பாதுகாத்துக் கொள்ள ஏதுவாக அவர்களுக்குப் பயிற்சியளிப்பதும் அவர்களை ஒன்று திரட்டுவதும் அந்த இயக் கத்தின் இலக்காக இருக்கிறது. இந்த நிலையில், அந்த இயக் கத்தில் எப்படி பங்குகொள்வது என்பது பற்றி குடியிருப்பாளர் களுக்கு இன்னமும் தெளிவாகப் புரியவில்லை என்று திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.