சிங்கப்பூருக்குள் 'ஸிக்கா' தொற்று

சிங்கப்பூருக்குள் 'ஸிக்கா' தொற்று

1 mins read

முதன்முதலாக சிங்கப்­பூ­ருக்­கு­ளேயே பர­வி­ய­தா­கக் கரு­தப்­படும் 'ஸிக்கா' கிரு­மித்­தொற்­றால் பெண் ஒருவர் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கிறார். அல்­ஜு­னிட் கிர­செண்­ட்டில் உள்ள புளோக் 102ல் வசித்­து­ வ­ரும் 47 வயது மலேசிய மாது வான அவர் சிங்கப்­பூ­ரில் பணி ­பு­ரிந்து வரு­கிறார். 'ஸிக்கா' கிருமித்தொற்று பாதிப்பு இருக்­கும் நாடுகளுக்கு­ அவர் அண்மை­யில் பயணம் செய்­ய­வில்லை; எனவே அவ­ருக்கு 'ஸிக்கா' கிருமித் தொற்று சிங்கப்­பூ­ருக்கு உள்ளேயே ஏற்­பட்­டுள்­ள­ தா­கக் கூறப்­படு­கிறது. சுகாதார அமைச்சு, தேசிய சுற்­றுப்­புற வாரியம் ஆகி­ய­வற்­றுக்கு இது குறித்து தகவல் அளிக்­கப்­பட்­டுள்­ளது.

இம்­மா­தம் 25ஆம் தேதி முதல் அவர் காய்ச்­சல், சரு­மத்­ தடிப்­பு­கள், கண்­களில் வெண்­ப­டல அழற்சி ஆகி­ய­வற்­றால் பாதிக்­கப்­ பட்­டி­ருந்தார். 26ஆம் தேதி பொது­ம­ருத்­து­வ­ரி­டம் சிகிச்சை பெறச் சென்ற அவர் டான் டோக் செங் மருத்­து­வ­மனை­யில் உள்ள தொற்று நோய் நிலை­யத்­துக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டார். அங்கு அவ­ருக்கு 'ஸிக்கா' கிருமி நோய்த்­தொற்று இருப்­ப­தாக நேற்று உறு­தி­செய்­யப்பட்­டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவர் தீவிர கண்­கா­ணிப்­பில் இருக்­கிறார். அவரது உடல் நலம் சிறப்­பா­கத் தேறி­வ­ரு­வ­தா­கக் கூறப்­படுகிறது.