காற்றுத் தரம் மேம்பட்டது

காற்றுத் தரம் மேம்பட்டது

2 mins read

சிங்கப்பூரில் நேற்று காற்றுத் தரம் மேம்பட்டது. அது நேற்றுக் காலை மிதமான நிலைக்குத் திரும்பியது. காற்றுத் தரக் குறியீடு நேற்றுக் காலை 9 மணி அளவில் 70=100 என்ற மிதமான அளவுக்கு உட் பட்டு இருந்தது. சிங்கப்பூரில் கடந்த வெள்ளிக் கிழமை முதல் புகைமூட்டம் காணப்பட்டது. மத்திய சுமத்ரா விலிருந்து அடர்த்தியான புகை சிங்கப்பூருக்கு காற்று மூலம் பரவவில்லை என்பதால் இங்கு காற்றுத் தரம் தொடர்ந்து மேம் படுவதாக நேற்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

நிலவரம் தொடர்ந்து மேம்படும் என்று எதிர்பார்க்கலாம். காற்று தென்மேற்கிலிருந்து தெற்குப் புறம் திரும்பும் என்று கணிக்கப்பட் டிருப்பதே இதற்கான காரணம். மதிய வேளைக்குச் சற்று முன்பும் அதற்குப் பின்பும் மழை எதிர்பார்க்கலாம் என்றும் வாரியம் குறிப்பிட்டுள்ளது. மத்திய சுமத்ரா விலிருந்து காற்று மூலம் சிங்கப்பூர் பக்கம் புகை பரவியதன் காரண மாக வெள்ளிக்கிழமை இங்கு புகைமூட்டம் காணப்பட்டதாக வாரியம் குறிப்பிட்டது. காற்றில் சூழும் புகைமூட்டம் காரணமாக ஒருவரின் உடல் நிலைக்கு ஏற்ப அவருக்குப் பாதிப்பு ஏற்படக்கூடும்.

வெளிப் புறத்தில் புகை சூழ்ந்த காற்றில் ஒருவர் எந்த அளவுக்குத் தீவிர மாக எவ்வளவு நேரம் செயல்படுகி றார் என்பதை பொறுத்தும் அவ ருக்குப் பாதிப்புகள் ஏற்படக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுத் தரம் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மக்கள் வழக்கமாக தங்கள் நடவடிக்கை களை தொடரலாம். என்றாலும் உடல்நிலை சரி யில்லாதவர்கள், குறிப்பாக முதிய வர்கள், சிறார்கள், முற்றிய இதய, நுரையீரல் நோய் உள்ளவர்கள் ஏதேனும் பிரச்சினை எனில் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று வாரியம் ஆலோசனை கூறியது. இந்த வட்டாரத்தில் ஆண்டுதோறும் புகைமூட்ட பிரச்சினை காரணமாக அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தோனீசியாவில் காடுகள் சட்டவிரோதமாக கொளுத்திவிடப் படுவதே இதற்கு காரணம்.