சஃப்ரா ஓட்டத்தில் சாதனை; 42,000 பேர்

சஃப்ரா ஓட்டத்தில் சாதனை; 42,000 பேர்

1 mins read
5b057d41-e647-48ec-a4b5-46a5e08abe1e
-

சாஃப்ரா அமைப்பும் ராணுவமும் நேற்றுக் காலை ஏற்பாடு செய்த நெட்டோட்ட நிகழ்ச்சியில் சுமார் 42,000 பேர் கலந்துகொண் டார்கள். சஃப்ரா சிங்கப்பூர் வளைகுடா ஓட்டம் மற்றும் ராணுவ பாதிதொலைவு நெடு ஓட்ட நிகழ்ச்சி இத்துடன் 24வது தடவையாக நடந்தது. இந்த ஆண்டில் சிங்கப்பூர் ஆயுதப் படையின் தேசிய சேவை யாளர்கள், படைவீரர்களின் குடும்பத்தினர் சுமார் 7,000 பேர் கலந்துகொண்டார்கள். இது 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடு கையில் 51% அதிகம்.

புகைமூட்டம் காணப்பட்டா லும் மக்கள் அதைப் பற்றி கவ லைப்படாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள். இந்த ஆண்டு ஓட்டத்தில் அதிக கேளிக்கை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. பிரம்மாண்ட மான இரண்டு காற்று மெத்தை கள், 5 கிலோ மீட்டர் ஓட்டத்தில் பயன்படுத்தப்பட்டன. முதல் தடவையாக 'வாழ்க்கைக்காக குடும்பங்கள்' என்ற 800 மீட்டர் சவால் ஓட்டத்தில் தாய்மார்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சி இதுவரையில் தந்தையருக்கும் பிள்ளைகளுக் கும் உரியதாக இருந்து வந்தது. தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தற்காப்பு மூத்த துணை அமைச்சரும் சஃப்ரா தலைவரு மான ஓங் யி காங், 5 கிமீ. கேளிக்கை ஓட்டத்தை தொடங்கி வைத்தார். சஃப்ரா துணைத் தலைவரான முகம்மது மாலிக்கி ஓஸ்மான் 10 கிமீ. ஓட்டத்தையும் வாழ்க்கைக்காக குடும்பங்கள் சவால் ஓட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

சஃப்ரா ஓட்டத்தில் கலந்து கொண்ட மக்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்