அறப்பணி செயலாற்றும் அமைதியான வீரர்கள்

அறப்பணி செயலாற்றும் அமைதியான வீரர்கள்

1 mins read
310ed3bf-6152-4eec-bd7a-3e863c6e0f31
-

திமத்தி டேவிட்

எந்தவித அங்கீகாரமும் எதிர் பார்ப்பும் இன்றி அசாதாரண மனி தாபிமானத்தையும் பரிவையும் வெளிக்காட்டியவர்களைக் கௌர விக்கும் நோக்குடன் மூன்றாம் முறையாக 'சைலண்ட் ஹீரோஸ்' (அமைதியான வீரர்கள்) விருதுகள் ஹில் வியூ சிவிலியன்ஸ் சங்கத் தின் 52ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சென்ற சனிக்கிழமை இரவு அறுவருக்கு வழங்கப்பட் டன. ஷங்ரிலா ஹோட்டலில் நடை பெற்ற விருந்து விழாவிற்கு தற் காலிக கல்வி அமைச்சர் (உயர் கல்வி, திறன்கள்) ஓங் யீ காங் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார்.

"தன்னலம் மறந்து, மூத்தோர், உடல்நலக் குறைவுள்ளோர், வசதி குறைந்தவர்கள் ஆகியோருக்கு தங்களால் முடிந்த சிறிய உதவி யையும் செய்யும் உள்ளம் படைத் தவர்களை அங்கீகரிக்கவும், பிற ருக்கு உதவும் ஊக்கத்தைப் பாராட்டவும் இவர்களை புகழ்கி றோம்," என்று அவர்களை மெச்சி னார் அமைச்சர் ஓங். பாலர் பருவத்திலேயே வீட்டு வேலைகளைச் செய்யவும் தமது எட்டு உடன்பிறப்புகளைக் கவனிக் கவும் பள்ளி வாழ்க்கையை நீத்தார் திருவாட்டி குருசாமி இந்திராணி, 65.

கணவரைப் பிரிந்து ஒற்றைப் பெற்றோராக தமது நான்கு பிள்ளைகளைக் கரை சேர்த்ததோடு தமது மாமியாரையும் கவனித்து வருகிறார் இந்திராணி.