1335 கடைகளுக்கு $29 மி. ஊக்கத்தொகை

1335 கடைகளுக்கு $29 மி. ஊக்கத்தொகை

2 mins read
841532dd-852d-47c6-b50f-ca6e8308d194
-

நாடெங்கிலும் இன்னும் பல வீட மைப்பு வளர்ச்சிக்கழக (வீவக) கடைகளை மேம்படுத்த அரசாங் கம் $29 மில்லியன் வழங்குகிறது. கடைகளின் போட்டித்தன்மையைக் கட்டிக்காக்க உதவும் நடப்புத் திட் டத்திற்கு வழங்கப்படும் ஆகப் பெரிய நிதி இது. கடை புதுப்பிப்புத் திட்டத்தின் கீழ் 1,335 கடைகளை மேம்படுத்த இந்த நிதி உதவும் என்று தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ நே ற்று அறிவித்தார். மேம்பாட்டுக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ள 17 புதிய வட்டாரத் தளங்களில் ஒன்றான கேலாங் ஈஸ்ட் அக்கம்பக்க நிலையத்திற்கு அவர் நேற்று வருகை மேற் கொண்டார்.

ஏழு வட்டாரத்தளங்கள், பொது இடங்களை மேம்படுத்தவும் விளம் பர நடவடிக்கைகளை நடத்தவும் வீவக-விடமிருந்து இணை நிதி பெறவிருக்கின்றன. ஆறு வட் டாரத் தளங்கள், பொது இடங் களின் மேம்பாட்டுக்கு மட்டுமே நிதி பெறும். மீதி நான்கு வட்டாரத் தளங்களும் விளம்பர நடவடிக்கை களுக்கு மட்டுமே நிதி பெறும். எல்லா வட்டாரத்தளங்களும் திட் டத்திற்கு விண்ணப்பம் செய்திருந் தன. அதோடு, பொது இட மேம் பாடு, விளம்பர நடவடிக்கைகள் அல்லது இரண்டுமே வேண்டுமா என்பதையும் குறிப்பிட்டிருந்தன. ஜூரோங் ஈஸ்ட், அங் மோ கியோ, ஹவ்காங், தெம்பனிஸ், பிடோக் போன்ற அக்கம்பக்கங் களில் வட்டாரத்தளங்கள் அமைந் துள்ளன.

நேற்று அல்ஜுனிட் பகுதிக்கு வருகை புரிந்த தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ அங்குள்ள கடைக்காரர்களைச் சந்தித்தார். (இடமிருந்து) கடை உதவியாளர் திருவாட்டி ஆர். பொன்னி, மெக்பர்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி டின் பெய் லிங், மூத்த துணை அமைச்சர் டெஸ்மண்ட் லீ, கடை நிறுவனர் திரு ஆர். கிருஷ்ணவேணு, கடை உரிமையாளர் கே. மோகன்ராஜ், கடை உதவியாளர் திரு ஆர். செல்வராஜ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்