சிங்கப்பூர் சுற்றுலாப் பயண பஸ் ஒன்று 12 பயணிகளுடன் ஜென் டிங் ஹைலண்ட்ஸில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிக் கொண் டிருந்தபோது தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில் 9 சிங்கப்பூரர்கள் காய மடைந்தனர். அந்தப் பேருந்தில் பயணம் செய்த 12 பயணிகளில் 9 பேர் சிங்கப்பூரர்கள். அவர்கள் அனைவரும் இந்த விபத்தில் காயமடைந்ததாக கிராஸ்லேண்ட் எக்ஸ்பிரஸ் & டூர்ஸ் என்ற அந்த சுற்றுலாப் பேருந்து நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். காயமடைந்த பயணிகளில் 7 பேரும் பேருந்து ஓட்டுநரும் பெந்தோங் பெரிய மருத்துவ மனையிலும் இருவர் கோலாலம் பூரில் உள்ள ஒரு மருத்துவ மனையிலும் சிகிச்சை பெறுவதாக அவர் தெரிவித்தார்.
அந்த இரண்டு மாடி பேருந்து பிற்பகல் 3.45 மணிக்கு தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்தச் சம்பவம் கோலாலம்பூரை கராக்கு டன் இணைக்கும் விரைவுச் சாலையில் நிகழ்ந்தது. இதனால் அப்பகுதியில் 9 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக மலேசியா வின் தி ஸ்டார் நாளிதழ் தெரிவித்தது.
ஜென்டிங் ஹைலண்ட்ஸில் இருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது விரைவுச்சாலையில் கவிழ்ந்த பேருந்து. படம்: மலேசிய தீயணைப்புப் படை

