சொத்து உரிமையாளர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் இணையம் வழி தகவல் சேவைக்கு சிங்கப்பூர் நில ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தங்கள் சொத்துகள் தொடர்பான தகவல்களைப் பெற விரும்புவோர் www.sla.gov.sg/MyProperty எனும் இணையப்பக்கத்துக்குச் செல்லலாம். இந்த இணையப்பக்கத்துக்குச் சென்று தகவல்களைப் பெற சிங்பாஸ் தேவைப்படும். - -இந்த இலவசத் தகவல் சேவையின் வழி சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்து உரிமைப் பத்திரங்களைப் பார்வையிடலாம். இணையப்பக்கத்தில் கூடுதல் அம்சங்கள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்படும். சொத்து உரிமைப் பத்திரத்துக்கு எதிராக எந்த ஒரு பத்திரம் பதிவு செய்யப்பட்டாலும் அது குறித்து இணையம் வழி சொத்து உரிமையாளர்களுக்குத்- தகவல் தெரிவிக்கப்படுவதும் அவற்றில் ஒன்று. தற்போது தங்கள் சொத்து உரிமைப் பத்திர-த்தைப் பார்வையிட விரும்பும் சொத்து உரிமையாளர்கள் சிங்கப்பூர் நில ஆணையத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட நிலத் தகவல் சேவைப் பிரிவிடமிருந்து அல்லது ஆணையத்து நேரில் சென்ற அதை வாங்கவேண்டும்.
சொத்து உரிமையாளர்களுக்கு இணையம் வழி இலவசத் தகவல்
1 mins read
-

