ஷெங் சியோங் பேரங்காடி உரிமையாளரின் தாயாரைக் கடத்திய குற்றத்துக்காக நீதிமன்றம் முன் நிறுத்தப்பட்டிருக்கும் 44 வயது லீ சீ யோங், செல்வந்தர் பீட்டர் லிம்மின் பிள்ளைகளே தமது முதல் இலக்காக இருந்ததாக தெரிவித்துள்ளார். திரு லிம்மின் பிள்ளைகளைத் தவிர்த்து சிங்கப்பூரில் உள்ள மற்ற பிரபலமான பணக்காரர் களும் லீயின் கடத்தல் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் 'பிரேட்டாக்' நிறுவனத்தின் ஜார்ஜ் குவெக், 'போப்பியா கிங்' திரு சேம் கோய், 'ஃபிரேகரன்ஸ்' குழுமத் தலைவர் திரு கோ வீ மெங், 'சீரியல் சிஸ்டம்ஸ்' நிறுவனத்தின் தலைவர் திரு கோ பாக் ஹெங், 'ராயல் பிரதர்ஸ்' என்று அழைக் கப்படும் செல்வந்தர்கள் ஆகி யோர் அடங்குவர்.
சிங்கப்பூருடன் தொடர்பு வைத்திருக்கும் வெளி நாட்டவர்களுக்கும் லீ குறி வைத் தது வெளிச்சத்துக்கு வந்துள் ளது. அவர்களில் இந்தோனீசியா வைச் சேர்ந்த செல்வந்தர் திரு அண்டனி சலிம், ஜென்டிங் குழுமத் தலைவர் திரு லிம் கோக் தே, செந்தோசா கோவ்வில் 39 மில்லியன் வெள்ளிக்கு பங் களா வீடு வாங்கிய இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகரும் பாடகருமான திரு ஷயில் ஒஸ்வால் ஆகியோர் அடங்குவர்.

