ஸ்காட்ஸ் சாலையில் மோசமான விபத்து

ஸ்காட்ஸ் சாலையில் மோசமான விபத்து

1 mins read
2c3f6ee0-d360-4441-9a7f-00163693698f
-

ஸ்காட்ஸ் சாலையில் நேற்றுப் பிற்பகல் மோசமான விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் மொத்தம் நான்கு வாகனங்கள் சேதமடைந்தன. குறைந்தது மூவர் காயமடைந்ததாக நம்பப்படுகிறது. ஷா ஹவுசுக்குப் பக்கத்தில் உள்ள கிலேமோர் ஹில்லிலிருந்து வெளி வந்த டாக்சி இரண்டு கார்கள் மீது மோதியது. அதனைத் தொடர்ந்து, அந்த டாக்சி சாலை யின் நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி எதிர்புறத்திலிருந்து வந்த வோல்வோ கார் மீது மோதியது.

"டாக்சி ஓட்டுநர் ரத்த வெள்ளத் தில் இருந்தார். அவரது தலை யிலிருந்து ரத்தம் கசிந்து கொண் டிருந்தது என்று நான் நினைக்கி றேன். அவர் சுயநினைவு இழந்த நிலையில் இருந்தார்," என்று விபத்து நிகழ்ந்த இடத்துக்கு பக்கத்தில் உள்ள ஒரு கடையில் பணிபுரியும் 24 வயது திரு ஜுமாட் அஸார் தாம் பார்த்த காட்சியை விவரித்தார். விபத்துக்குள்ளான கார் ஒன்றின் ஓட்டுநரான 32 வயது திரு ர‌ஷீது ஹா‌ஷிம் விபத்து நிகழ்ந்தபோது இயோன் ஆர்ச்சர்ட் கடைத்தொகுதியிலி ருந்து தெம்பனிஸ் வட்டாரத்தில் இருக்கும் தமது அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தார்.

ஸ்காட்ஸ் சாலையில் நேற்று நிகழ்ந்த விபத்தில் நொறுங்கிய வோல்வோ காரும் டாக்சியும். இந்த மோசமான விபத்தில் நான்கு வாகனங்கள் சேதமடைந்தன. குறைந்தது மூவர் காயம் அடைந்ததாக நம்பப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்