சிங்கப்பூரில் ஒரே சமயத்தில் இரண்டு மணி நேரத்தில் டெங்கி, சிக்குன்குனியா, ஸிக்கா ஆகிய மூன்று நோய்க்கிருமிகளைக் கண் டறியும் மருத்துவ பரிசோதனைக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் அறிவியல் அறிஞர் கள் குறைவான செலவில் இந்த மருத்துவ சோதனைக் கருவியைத் தயாரித்துள்ளனர். இதில் உலக சுகாதார நிறு வனம் உட்பட பல நாடுகள் ஆர் வம் காட்டுவதாக 'ஏஸ்டார்' எனும் அறிவியல், தொழில்நுட்ப ஆய்வு முகவையின் மூத்த ஆய்வாளரான டாக்டர் மஸஃபுமி இனோவ் கூறி னார்.
மூன்று நோய்க் கிருமிகளையும் அடையாளம் காணும் கருவியைத் தயாரித்த அறிவியல் ஆய் வாளர்களில் இவரும் ஒருவர். இந்தக் கருவிகளைச் சோதனைக்கு அனுப்புவதற்கு முன்பு தகவல்கள் திரட்டப்பட்டு ஆராயப்படுவதாகவும் அவர் தெரி வித்தார். கொசுக்களால் பரவும் மூன்று வைரஸ்களும் அரிப்பு, மூட்டு வலி போன்ற பொதுவான அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. பொதுவாக ஸிக்கா கிருமியின் அறிகுறிகள் மிதமாகவும் ஒரு வாரத்தில் மறையக் கூடியதாகவும் உள்ளன. "மூன்று நோய்க் கிருமிகளையும் உடனடியாக வேறுபடுத்திக் கண்டுபிடிப்பது அவசியம்," என்று அவர் தெரிவித்தார்.

